Thursday, 26 December 2013

பிரதேசமட்ட தொழிற்சந்தை"

"ஆலையடிவேம்பில் நடைபெற்ற பிரதேசமட்ட தொழிற்சந்தை"

உற்பத்தித்திறன் மேம்பாட்டு அமைச்சு, மனிதவலு, வேலைவாய்ப்புத் திணைக்களத்தின் தொழில் உருவாக்கல், மேம்படுத்தல் மற்றும் தொழில் வழிகாட்டல் பிரிவு மற்றும் ஆலையடிவேம்பு பிரதேச செயலகம் என்பன இணைந்து 
பிரதேச செயலகக் கேட்போர் கூடத்தில் நடாத்திய மாபெரும் பிரதேசமட்ட தொழிற்சந்தை பிரதேச செயலாளர் வேதநாயகம் ஜெகதீசன் தலைமையிலும் மனிதவள அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எல்.தமீம் ஏற்பாட்டிலும் இன்று காலை 9.00 மணி முதல் பி.ப. 1.00 மணிவரை நடைபெற்றது.

Photo 
Photo
Photo

அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பி.எச்.பியசேன கௌரவ அதிதியாகக் கலந்துகொண்டு தேசிய கொடியேற்றி இத்தொழிற்சந்தையை ஆரம்பித்துவைத்து உரையாற்றியதுடன் பிரதேச செயலாளரும் இவ்வாரம்ப வைபவத்தில் சிறப்புரையாற்றினார்.

இத்தொழிற்சந்தையில் ஹாடி உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவகம், இலங்கை தொழிற்பயிற்சி அதிகாரசபை, தேசிய பயிலுனர் மற்றும் கைத்தொழிற் பயிற்சி அதிகாரசபை, காப்புறுதி நிறுவனங்கள், தயா ஆடை உற்பத்தி மற்றும் ஏற்றுமதி நிறுவனம், பிரதேசமட்ட தனியார் உயர்கல்வி நிறுவனங்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனங்கள் மற்றும் முகாமைத்துவ சேவை நிறுவனங்கள் உட்பட பல்வேறுபட்ட தொழில் வழங்குனர்கள் பங்கேற்றனர்.

ஆலையடிவேம்பு பிரதேசத்தில் பாடசாலைக் கல்வியைப் பூர்த்திசெய்த இளைஞர், யுவதிகளில் தொழிற்பயிற்சிகளைத் தொடர விரும்பியோர், காப்புறுதித்துறைகளில் வேலைவாய்ப்புக்களைப் பெற விரும்பியோர், வெளிநாட்டு வேலைவாய்ப்புக்களை எதிர்பார்ப்போர் உட்பட பலதரப்பட்ட மக்களும் இத்தொழிற்சந்தையில் பங்குபற்றி பயன்பெற்றனர்.

No comments: