"ஆலையடிவேம்பு முன்பள்ளி சிறார்களின் சுற்றுலா நிகழ்வு"
ஆலையடிவேம்பு பிரதேசப் பாலர் பாடசாலைகளில் கல்விபயிலும் முன்பள்ளி சிறார்கள் கலந்துகொண்ட சுற்றுலா நிகழ்வொன்று 24-12-2013, செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது. முன்பள்ளி அபிவிருத்தி வாரத்தினை முன்னிட்டு சிறுவர் அபிவிருத்தி மற்றும் பெண்கள் விவகார அமைச்சின் அனுசரணையுடன் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இச்சுற்றுலாவில் சுமார் 30 மாணவர்களும் 4 ஆசிரியைகளும் பிரதேச செயலகத்திலிருந்து முன்பிள்ளைப்பராய அபிவிருத்தி உத்தியோகத்தர் வை.உஜெயந்தன், உளவளத்துணை உதவியாளர் ஏ.எம்.சப்றினா ஆகியோரும் கலந்துகொண்டனர்.
கிழக்கில் பிரசித்திபெற்ற ஒலுவில் மீன்பிடித் துறைமுகம், பாலமுனை சிறுவர் பூங்கா மற்றும் இயற்கை எழில்கொஞ்சும் பாலமுனை கடற்கரைப் பிரதேசம் என்பனவற்றைப் பார்வையிட்ட இவர்கள் அதன்பின்னர் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்கு வருகைதந்து பிரதேச செயலாளர், உதவித் திட்டமிடல் பணிப்பாளர் ஆகியோரைச் சந்தித்து தமது பயண அனுபங்களைப் பகிர்ந்துகொண்டனர். இதன்போது பிரதேச செயலாளரால் அவர்களுக்குச் சிற்றுண்டி உபசாரம் வழங்கப்பட்டது.

No comments:
Post a Comment