Thursday, 26 December 2013

ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தால் வழங்கப்பட்ட வாழ்வாதார உதவிகள்”



மஹிந்த சிந்தனை வேலைத்திட்டத்தின் கீழ் வாழ்வாதார உதவிகள் தேவையுடையோராக அடையாளங்காணப்பட்ட வலுவிழந்தோருக்கான கொடுப்பனவுகள் இன்று 26-12-2013, வியாழக்கிழமை பிரதேச செயலக சமுகசேவைகள் பிரிவால் வழங்கிவைக்கப்பட்டன.

Photo  Photo


பிரதேச செயலாளர் வேதநாயகம் ஜெகதீசன் தலைமையில் நடந்த இந்நிகழ்வில் வாச்சிகுடாவைச் சேர்ந்த எஸ்.சரோஜாதேவி, ரி.கமலநாதன், கோளாவில் – 2 கே.வேல்முருகு ஆகியோர் வலுவிழந்தோருக்கான உதவிக்கொடுப்பனவுகளைப் பெற்றுக்கொண்டனர். இதன்போது அக்கரைப்பற்று பெண்கள் அபிவிருத்தி அரங்கத்தின் (WDF) அனுசரணையில் வாழ்வாதார உதவித்திட்டத்தின்கீழ் தையல் இயந்திரக் கொள்வனவிற்கான கொடுப்பனவினை கண்ணகிகிராமம் – 2 இனைச் சேர்ந்த ஜே.ஜெயப்பிரியா பெற்றுக்கொண்டார்.

இந்நிகழ்வுகளின்போது பிரதேச செயலாளருடன் சமுகசேவைகள் பிரிவு உத்தியோகத்தர்கள், மற்றும் பெண்கள் அபிவிருத்தி அரங்கத்தின் திட்ட உத்தியோகத்தர் ஆர்.பிரபாகரன் ஆகியோரும் உடனிருந்தனர்


No comments: