"ஆலையடிவேம்பில் பாலர் பாடசாலைகளுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிவைப்பு"
ஆலையடிவேம்பு பிரதேசத்திலுள்ள தெரிவு செய்யப்பட்ட பாலர் பாடசாலைகளுக்கு ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தினால் கற்றல் உபகரணங்கள் வழங்கும் வைபவங்கள் 18.12.2013, புதன்கிழமை காலை இடம்பெற்றன.
இவ்வைபவத்திற்கு ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.ஜெகதீசன் அதிதியாகக் கலந்துகொண்டு பிரதேச செயலகத்தின் சார்பாக பாலர்களின் கற்றல் நடவடிக்கைகளுக்கு அவசியமான காகிதாதிகள் மற்றும் உபகரணங்களையும் பரிசுப்பொருட்களையும் வழங்கினார்.
ஆலையடிவேம்பு மகாசக்தி டயகோனியா பாலர் பாடசாலை, தீவுக்காலை கிராம எழுச்சி பாலர் பாடசாலை, நாவற்காடு கலைவாணி பாலர் பாடசாலை, சின்னப்பனங்காடு கிராம எழுச்சி பாலர் பாடசாலை, வாச்சிக்குடா மகாசக்தி பாலர் பாடசாலை, அக்கரைப்பற்று - 9 பாவேந்தர் பாலர் பாடசாலை, கோளாவில் - 2 மகாசக்தி பாலர் பாடசாலை, மகாசக்திகிராமம் மகாசக்தி பாலர் பாடசாலை ஆகியவற்றுக்கு இவை வழங்கிவைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திலிருந்து முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர் வை.உஜெயந்தன், பிரதேச செயலாளரது வெகுஜன தொடர்பு உத்தியோகத்தர் எஸ்.ஜே.பிரேம் ஆனந்த், பாலர் பாடசாலையின் மாணவர்கள், ஆசிரியைகள் மற்றும் மாணவர்களது பெற்றோர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இவ்வைபவங்களில் பாலர் பாடசாலை ஆசிரியைகளும் பெற்றோர்களும் தேவையறிந்து தமக்கு அத்தியாவசியமானவைகளாகவிருந்த கற்றல் உபகரணங்களை மனமுவந்து வழங்கியமைக்காக பிரதேச செயலாளருக்கும் ஊழியர்களுக்கும் தமது நன்றிகளைத் தெரிவித்தனர்

No comments:
Post a Comment