Wednesday, 24 February 2021

உழுந்து உற்பத்தியாளர்களுக்கு அறிவுறுத்தல்....

Riya

உழுந்து இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், உழுந்து செய்கையாளர்கள் தமது உற்பத்திகளை உடன் சந்தைப்படுத்துமாறு, வவுனியா மாவட்டக் கமக்காரர் ஒழுங்கமைப்புகளின் சம்மேளனம் தெரிவித்துள்ளது. 




இறக்குமதியாளர்களளால் விநியோகிக்கக் கூடிய உச்ச விலையானது, 640 ரூபாய் வரை இருக்கலாமென அறியப்படுகின்றது. இதன் அடிப்படையில், எதிர்காலத்தில் உழுந்தின் சில்லறை விலை 750 - 800 ரூபாய்க்கு இடைப்பட்டதாகவே இருக்கும். 

எனவே, உழுந்தை சந்தைக்கு விடாது, அதிக விலைக்கு விற்க காத்திருக்கும் விவசாயிகள் எதிர்காலத்தில் நட்டமடையக் கூடிய வாய்ப்புகள் உள்ளன.

இதேவேளை, விதை உழுந்துச் செய்கைக்காக விதையை விதைகள் உற்பத்தித் திணைக்களத்தில் பெற்ற விவசாயிகள், மீள விதை உழுந்தை தரத்தின் அடிப்படையில்   920 ரூபாய்க்கு  குறித்த திணைக்களத்துக்கு விற்க இயலும். 

இதுவரை விதை உழுந்துக்கான தேவையின் 1/3  கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் விதை உழுந்துகளை மீளச் செலுத்தாதவர்களுக்கான சலுகைகள் எதிர்காலத்தில்  மட்டுப்படுத்தப்படும்  எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

No comments: