இதற்கமைவாக அம்பாரை மாவட்டத்திலும் இன்று பொங்கல் விழா பிரதேச செயலங்கள் தோறும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி இடம்பெற்று வருகின்றன.
ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் வி.பபாகரன் தலைமையில் இடம்பெற்ற பொங்கல் விழாவில் உதவிப்பிரதேச செயலாளர் ஆர்.சுபாகர் கணக்காளர் க.பிரகஸ்பதி, நிருவாக உத்தியோகத்தர் கே.சோபிதா தலைமையக சமுர்த்தி முகாமையாளர் என்.கிருபாகரன் மேலதிக மாவட்ட பதிவாளர் எம்.பிரதீப் சிரேஸ்ட அபிவிருத்தி உத்தியோகத்தர் கே.பி.ரவிச்சந்திரன் கிராம உத்தியோகத்தர் க.அருள்ராஜா உள்ளிட்ட பிரதேச செயலக உயர் அதிகாரிகள் மற்றும் சகல மதங்களையும் சேர்ந்த உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
பல பானைகளில் பொங்கலிடும் நிகழ்வுகள் பல பிரிவு உத்தியோகத்தர்களினாலும் மேற்கொள்ளப்பட்டது.
இதேநேரம் பிரதான பானையில் பொங்கலிடும் நிகழ்வை பிரதேச செயலாளர் ஆரம்பித்து வைத்தார்.
உழைக்கும் மக்களால் இயற்கை தெய்வங்களுக்கு நன்றி செலுத்தும் உழவர் திருநாளாம் தைப்பொங்கலை சிறப்பிக்கும் நிகழ்வில் பொங்கலோ பொங்கல் என மகிழ்ச்சி பொங்கல் பிரதேச செயலாளர் வழிகாட்டலில் உத்தியோகத்தர்கள் பொங்கிவரும் பானையில் அரிசி இட்டு மகிழ்ந்ததுடன் பூஜை வழிபாடுகளிலும் கலந்து கொண்டனர்.
அக்கரைப்பற்று மருதடி மாணிக்கப்பிள்ளையார் ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ க.கஜமுகசர்மா பூஜை வழிபாடுகளை நடாத்தி வைத்தார்
haran
No comments:
Post a Comment