Thursday 21 January 2021

பிளாஸ்டிக் தடை


வி.விபுர்தன் 

ஒருமுறை மாத்திரம் பயன்படுத்தப்படும் பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் உற்பத்தியிலான பொருட்களை தடை செய்யும் தீர்மானம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் வரை நீடிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய ஏப்ரல் மாதத்தின் முதல் வாரத்தில் இருந்து தீர்மானத்தை செயற்படுத்தும் வர்த்தமானியில் சுற்றுலாத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர கையொப்பமிட்டுள்ளார்.

ஒரு முறை மாத்திரம் பாவனைக்கு பயன்படுத்தப்படும் பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் உற்பத்தியிலான பொருட்களை இம்மாதத்தின் முதல் வாரத்தில் இருந்து தடை செய்யும் யோசனையை சுற்றுலாத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர கடந்த வருடம் அமைச்சரவையில் முன்வைத்தார்.

தடைசெய்ய தீர்மானிக்கப்பட்ட பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் உற்பத்தியில் ஈடுப்படுபவர்களுக்கு நிவாரணம் மற்றும் இதர நடவடிக்கைகளுக்கான காலவகாசம் வழங்க வேண்டும் என அமைச்சரவை மட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டது இதற்கமைய இரண்டு மாத காலவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இதற்கமைய வாசனைத் திரவியங்கள் மற்றும நீராகார பொருட்கள் அடைக்கப்பட்ட சிறு பொலித்தீன் பெக்கேட், காற்று நிரப்பப்பட்ட பிளாஸ்டிக் உற்பத்தியிலான விளையாட்டு பொருட்கள்,மைக்ரோன் 20 ற்கு குறைவான லஞ்சீட் (உணவு பொதியுறை) ஆகிய உற்பத்திகளை ஏப்ரல் மாத்தில் இருந்து உற்பத்தி செய்யவும், பகிர்ந்தளிக்கவும் விதிக்கப்பட்டுள்ள தடை ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் இருந்து அமுல்படுத்தப்படும்.

haran

No comments: