Wednesday, 27 January 2021

இலங்கையின் முதல் சைகை மொழி அறிக்கையாகும்.

இலங்கையின் முதல் சைகை மொழி பத்திரிகையாளர் சுரங்கா உதாரி சமீபத்தில் காலியில் கடலோரப் பகுதி குறித்த அறிக்கையுடன் அறிமுகமானார். உதாரி மாசுபாட்டைக் கையாண்டார், இது ஒரு பிரச்சினையாக இருந்தது, இது இலங்கையின் முதல் சைகை மொழி அறிக்கையாகும். சுரங்கா உதாரி காது கேளாதவராக பிறந்தார், ஆனால் பத்திரிகையை நேசித்தார்.

Sunday, 24 January 2021

கல்முனை மனித உரிமை பிராந்திய இணைப்பாளராக ஏ.சி. அப்துல் அஸீஸ்



 
அம்பாறை மாவட்டம் கல்முனையில் இயங்கி வரும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிராந்திய இணைப்பாளராக உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ஏ.சி. அப்துல் அஸீஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கமைய இடமாற்றம் பெற்று வந்த இவர் கல்முனை கிட்டங்கி பிரதான வீதியிலுள்ள இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனை பிராந்திய நிலையத்தில் அவர் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார்.

இவர் இதற்கு முன்னர் மட்டக்களப்பு மாவட்ட மனித உரிமை ஆணைக்குழுவின் பிராந்திய இணைப்பாளராக சுமார் 20 வருடங்களுக்கு மேலாக கடமையாற்றிய நிலையில் அங்கு அடிப்படை மனித உரிமை மீறல் சம்மந்தமாக பிரச்சினைகளை புலனாய்வு செய்து விசாரணை செய்து அதன் அடிப்படையில் தீர்வுகளை வழங்கியுள்ளதுடன் தற்போது கல்முனைக்கு இடமாற்றம் பெற்றுள்ளார்.

தற்போது கல்முனை பிராந்தியத்தில் அரச நிர்வாக நிறைவேற்று அதிகாரிகளுக்கு எதிராக அடிப்படை உரிமை மீறல் முறைப்பாடுகளை ஆணைக்குழு விசாரணை செய்து தீர்வுகளை பெற்றுக்கொடுக்கவும் பரிந்துரைகளை முன்வைக்கவும் 1996 ஆம் ஆண்டில் 21ஆம் இலக்க இலங்கை மனித உரிமை ஆணைக்குழு சட்டத்திற்கு அமைவாக அதிகாரம் வழங்கப்பட்டு மக்களின் மனித உரிமைகளை மேம்படுத்தவும் பாதுகாக்கவும் முனைப்புடன் செயற்பட்டு வருகின்ற ஒரு அரச நிறுவனம் என்பதை கருத்திற் கொண்டு மக்கள் இத்தகைய முறைப்பாடுகளை செய்ய முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இவ்வாறு உரிமை மீறல்கள் தொடர்பில் முறையிட விரும்புபவர்கள் பிராந்திய காரியாலய தொலைபேசி இலக்கமான 0672229728 இலக்கத்துடன் தொடர்பு கொள்ள முடியும்.

இதேவேளை முன்னதாக கல்முனை பிராந்திய இணைப்பாளராகப் பணியாற்றிய அப்துல் லத்தீப் இஸ்ஸதீன் தற்போது இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மட்டடக்களப்பு பிராந்திய இணைப்பாளராக இடமாற்றம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Saturday, 23 January 2021

விடுமுறைக்கு வீடு சென்ற வாழைச்சேனை பொலிஸ் நிலைய உத்தியோகத்தர் விபத்தில் பலி

மோட்டார் சைக்கிள் – டிப்பர் விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் நேற்று (23) மாலை மரண மடைந்துள்ளளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அதி சக்தி வாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு


அண்டார்டிகாவில் சிலி விமானப்படை தளம் அமைந்துள்ள கடலோர பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

உலக சுகாதார ஸ்தாபனத்தினால் அறிவிக்கப்பட்ட கொரோனா அபாய நிலையையும் கடந்த இலங்கை

நாட்டில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கையானது உலக சுகாதார ஸ்தாபனத்தினால் அபாய நிலையாக அறிவிக்கப்பட்டதை விட அதிகமாக உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

உலக சுகாதார ஸ்தானம் குறிப்பிட்டுள்ள 5 தசம் 5 வீதம் எனும் எண்ணிக்கையை நாடு கடந்துள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பிரதம செயலாளர் ஹரித அலுத்கே தெரிவித்தார்.



எனவே நாடு அபாய கட்டத்தை அடைந்துள்ளதை உணர முடிந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்போது அடையாளம் காணப்படும் தொற்றாளர்கள், மினுவாங்கொடை மற்றும் பேலியகொடை கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என சுகாதார தரப்பு கூறுகின்றது என அவர் கூறியுள்ளார்.

எனினும் தற்போது பதிவாகும் கொரோனா தொற்றாளர்களுக்கும் குறித்த இரு கொத்தணிகளுக்கும் எந்தவித தொடர்பும் கிடையாது என அவர் கூறினார்.

அத்துடன் மேல் மாகாணத்தில் இருந்து ஏனைய பிரதேசங்களுக்கு கொரோனா தொற்று பரவுவதை கட்டுப்படுத்த நாடு தவறியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் நாடு மிக மோசமான நிலையை நோக்கி சென்று கொண்டிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கிழக்கில் 2000 ஐ கடந்தது கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை

கிழக்கு மாகாணத்தில்  கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 2134 ஆக அதிகரித்துள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதுவரையான காலப்பகுதியில் கிழக்கு மாகாணத்தில் 13 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளது 

Friday, 22 January 2021

தேர்தல் இடாப்பிலிருந்து நீக்கப்பட்டமை தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு விசாரணை

இடம்பெயர்ந்த 7,727 பேரின் பெயர்கள் தேர்தல் இடாப்பிலிருந்து நீக்கப்பட்டமை தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு விசாரணை

இம்முறை தமிழில் தேசிய கீதத்தை இசைத்து நல்லிணக்கத்தை ஏற்படுத்த அரசாங்கத்திடம் கோரிக்கை


தமிழில் தேசிய கீதத்தை இம்முறையேனும் இசைத்து இன நல்லிணக்கத்திற்கான நம்பகத்தன்மையை வெளிப்படுத்த வேண்டும் என புதிய ஜனநாயக முன்னணி வலியுறுத்தியுள்ளது.

முச்சக்கரவண்டி சாரதியின் கவனயீனத்தினால் 3 வாகனங்கள் சேதம் - இருவர் காயம்


முச்சக்கரவண்டி சாரதியின் கவனயீனத்தினால் ஏற்பட்ட விபத்தில் வீதியில் சென்ற 3 வாகனங்கள் சேதமடைந்ததுடன் இருவர் காயமடைந்துள்ளனர்.
அம்பாறை மாவட்டத்தில் கல்முனை அக்கரைப்பற்று பிரதான வீதியில் கட்டையடி பகுதியில் வெள்ளிக்கிழமை(22) இரவு இவ் விபத்து சம்பவம் இடம்பெற்றது.


குறித்த விபத்தின் போது பிரதான வீதியால் பயணம் செய்த மோட்டார் சைக்கிள் முச்சக்கரவண்டி கார் என்பவற்றை குறுக்கு வீதி ஒன்றின் ஊடாக பயணம் செய்த முச்சக்கரவண்டி பிரதான வீதியினை குறுக்கறுக்கும் போது மோதி சேதப்படுத்தியது.

இவ்விபத்தில் குறித்த முச்சக்கரவண்டியின் சாரதி பிரதான வீதியால் வந்த மோட்டார் சைக்கிள் செலுத்தி சென்ற இளைஞனும் காயமடைந்துள்ளனர். 

Thursday, 21 January 2021

வலப்பனை பகுதியில் நில அதிர்வு


நுவரெலியா  வலப்பனை பகுதியை அண்மித்த பிரதேசங்களில் இன்று அதிகாலை 1.8 ரிக்டர் அளவிலான நில அதிர்வு  ஏற்பட்டுள்ளது.

கோவிட் -19: அமெரிக்க தடுப்பூசி விநியோகத்திற்கு அமேசான் உதவுகிறது


புதிய ஜனாதிபதி ஜோ பிடனுக்கு எழுதிய கடிதத்தில், அமெரிக்காவில் கோவிட் -19 தடுப்பூசிகளை விநியோகிக்க அமேசான் முன்வந்துள்ளது.

நிறுவனத்தின் தலைமை நிர்வாகி டேவ் கிளார்க் எழுதிய கடிதத்தில், ஈ-காமர்ஸ் நிறுவனமான "இந்த முயற்சியில் உங்களுக்கு உதவ தயாராக உள்ளது" என்று கூறியுள்ளது.

மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஆராய்வதற்காக மூவரடங்கிய ஆணைக்குழு நியமனம்

மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஆராய்வதற்காக மூவரடங்கிய ஆணைக்குழுவொன்று  நியமிக்கப்பட்டுள்ளது.

உயர்நீதிமன்ற நீதிபதி எச் எம் எம் நவாஸ் தலைமையில் கடந்த 20 ஆம் திகதி முதல் செயற்படும் வகையில்ஜனாதிபதியினால்  இந்த விசேட குழு நியமிக்கப்பட்டுள்ளது.


நியமிக்கப்பட்ட பட்டதாரி பயிலுனர்களை


அதிமேதகு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ அவர்களின் சுபீட்சத்தின் நோக்கு கொள்கைப் பிரகடத்திற்கமைவாக நியமிக்கப்பட்ட பட்டதாரி பயிலுனர்களை பாடசாலைகளில் பயிற்சி ஆசிரியர்களாகவும், ஏனைய திணைக்களங்களுக்கு பயிற்சி அபிவிருத்தி உத்தியோகத்தர்களாகவும் இணைத்துக் கொள்வதற்கான நியமனக் கடிதங்கள் இன்று (21) பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் பிரதேச செயலாளர் திரு சிவஞானம் ஜெகராஜன் அவர்களின் தலைமையில் வழங்கி வைக்கப்பட்டன.

பிளாஸ்டிக் தடை


வி.விபுர்தன் 

ஒருமுறை மாத்திரம் பயன்படுத்தப்படும் பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் உற்பத்தியிலான பொருட்களை தடை செய்யும் தீர்மானம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் வரை நீடிக்கப்பட்டுள்ளது.

பொங்கல் விழா

தேசிய பொங்கல் விழாவிற்கு இணைவாக அரச அலுவலங்களிலும் பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்று வருகின்றது.

Sunday, 3 January 2021

67 வயதான ஆண் ,மரணமடைந்துள்ளார்.


ஆலையடிவேம்பு பிரதேசத்தைச் சேர்ந்த, 67 வயதான ஆண் ஒருவர், வெலிக்கந்தை ஆதார வைத்தியசாலையில் இருந்து, தொற்றுநோய் விஞ்ஞானப் பிரிவுக்கு (IDH) மாற்றப்பட்ட நிலையில் மரணமடைந்துள்ளார்.