haran
(பாறுக் ஷிஹான் )
தனியார் பஸ் மற்றும் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் ஒருவர் ஸ்தலத்தில் உயிரிழந்துள்ளார்.
சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நிந்தவூர் அட்டப்பளம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (6) இரவு 8:30மணியளவில் அக்கரைப்பற்றில் இருந்து கொழுப்பு நோக்கி பயணித்த தனியார் பஸ் மற்றும் மோட்டார் சைக்கிள் அட்டப்பள்ளம் பெரிய பாலத்தருகில் மோதுண்டதில் குறித்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த விபத்தில் அட்டப்பளம் பிரதேசத்தில் இருந்து நிந்தவூர் பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் பயணித்த நிந்தவூரை சேர்ந்த 35 வயதுடைய நபரே ஸ்தலத்தில் பலியானார்.
நான்கு பிள்ளைகளின் தந்தையான இறந்தவரின் சடலம் நிந்தவூர் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் குறித்த பஸ் சாரதி பொலிசாரால் கைது செய்யப்பட்டு விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிசார் மேற்கொண்டுள்ளனர்.

No comments:
Post a Comment