Monday, 14 August 2017

கடத்தல் முயட்சி பெண்ணின் சாமர்த்தியத்தால் முறியடிப்பு

haran
தமது வேலை முடிந்ததும் வீட்டிற்கு செல்வதற்காக காத்து நின்ற   பெண்   இளைஞர்களால் கடத்தப்பட்ட சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது .




 காத்தான்குடி கடை ஒன்றில் தொழில்புரியும் மகிழடித்தீவை சேர்ந்த பெண் ஒருவர் நேற்றையதினம் வேலை முடிந்ததும் தமது கிராமத்துக்கு செல்லும் பேரூந்தை எதிர்பார்த்து ஆரையம்பதி 5ம் கட்டை சந்தியில் நின்ற போது இவ்வழியில் காரில் வந்தவர்கள்; தாங்களும் அந்தப்பக்கம் செல்லவுள்ளதாக கூறி காரில் ஏற்றி சென்றுள்ளனர்.

காரில் ஏற்றிய   இளைஞர்கள் பெண்ணின் வீட்டிற்கு செல்லும் வழியில் இறக்கி விடுமாறு கூற குறித்த இடத்தில் காரை திருப்பி வேறு திசை நோக்கி வேகமாக காரை செலுத்திய போது கார் கதவை திறந்து அந்தப்பெண் கூக்குரல் இட்டமையால் வீதியில் நின்ற இளைஞர்கள் குறித்த காரை வழிமறித்து பிடித்து கொக்கட்டிச்சோலை பொலிஸில் ஒப்படைத்துள்ளனர்.

குறித்த சம்பவம் நேற்று (13) மாலை 6.00 மணிக்கு மகிழடித்தீவு பிரதான வீதியில் இடம்பெற்றுள்ளது.

No comments: