மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள கர்பலா பொலிஸ் சோதனைச் சாவடியில் கடமையிலிருந்த கந்தேவத்த கெத்தரமுல்லையைச் சேர்ந்த எஸ்.திலகரத்ன
(வயது 44) எனும் பொலிஸ் அதிகாரி, இன்று (14) காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளாரென, காத்தான்குடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கஸ்தூரி ஆராச்சி தெரிவித்தார்.
காலை வேளைக் கடமைக்காகச் சென்ற மற்றைய பொலிஸ் உத்தியோத்தர், இவர் அசைவற்று சரிந்து இருந்ததைக் கண்டு, அவரை எழுப்பிய போது, அவர் மரணமாகியிருந்தமை தெரியவந்துள்ளது. சடலம், காத்தான்குடி ஆராத வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்டு, பிரேத பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்குக் கொண்டுசெல்லப்பட்டது.
மாரடைப்புக் காரணமாக குறித்த பொலிஸ் அதிகாரி இறந்திருக்கலாம் எனத் தெரிவித்த காத்தான்குடி பொலிஸார், உடற் கூற்றுப் பரிசோதனையும் மேலதிக விசாரணையும் மேற்கொண்டு வருகின்றனர்.

haran
No comments:
Post a Comment