சமுதாய சீர்திருத்தத் திணைக்களத்தின் ஆலையடிவேம்பு பிரதேச
மட்ட செயற்குழுவினது மாதாந்த ஒன்றுகூடல் நிகழ்வானது பிரதேச செயலாளர் வி.ஜெகதீஸன் தலைமையில்
இன்று (20) காலை இடம்பெற்றது.
ஆலையடிவேம்பு பிரதேச செயலக சமுதாய சீர்திருத்த அபிவித்தி
உத்தியோகத்தர் திருமதி. சரளா பரமசிவனின் ஏற்பாட்டில் ஆலையடிவேம்பு பிரதேச செயலகக்
கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற குறித்த ஒன்றுகூடலில் உதவி பிரதேச செயலாளர்,
அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற சமுதாய சீர்திருத்த உத்தியோகத்தர், திருக்கோவில்
வலயக் கல்விப் பணிமனையின் முறைசாராக் கல்வி ஆசிரிய ஆலோசகர் மற்றும் அக்கரைப்பற்று
பொலிஸ் நிலைய பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கெதிரான குற்றத் தடுப்புப் பிரிவின்
பொறுப்பதிகாரி உள்ளிட்ட ஆலையடிவேம்பு பிரதேச மட்ட செயற்குழுவின் உறுப்பினர்கள்
கலந்துகொண்டனர்.
இவ் ஒன்றுகூடலின்போது நீதிமன்றினால் சமுதாய சீர்திருத்தக்
கட்டளைக்குட்படுத்தப்பட்ட தவறாளர்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டுவரும் தொடர்ச்சியான
பின்தொடர் நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதுடன், அவ்வாறு இனங்காணப்பட்டவர்களது
குடும்பங்களில் நிலவிவரும் வறுமை நிலை, அவர்களது பிள்ளைகளின் கல்வி, சுகாதார நிலை
போன்ற விடயங்களும் கவனத்தில் எடுக்கப்பட்டிருந்தன.
இதன்போது குறித்த பிரதேச மட்ட சீர்திருத்தச் செயற்குழு
அங்கத்தவர்கள் ஒன்றிணைந்து ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்துக்குட்பட்ட 22 கிராம
சேவகர் பிரிவுகளையும் உள்ளடக்கிய வகையில் திட்டமிடப்பட்ட ஒழுங்கில் களப்
பரிசோதனைகளை மேற்கொள்வது தொடர்பிலும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
No comments:
Post a Comment