அ .சுஜன் ....
மட்டக்களப்பு மாவட்டத்தை போஷாக்கு நிறைந்த மாவட்டமாக நல்லாட்சி அரசாங்கத்தின் மூலம் மாற்றுவோம் என கடல்தொழில் மற்றும் நீரியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சரும், மகாவலி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சருமான மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
அரசாங்கத்தில் அங்கம்வகிக்கும் அனைத்து கட்சிகளும் கூட்டாக இணைந்து எதிர்வரும் மாகாண சபை மற்றும் உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களுக்கு முகங்கொடுக்கத் தீர்மானித்துள்ளது
இதன்நிமித்தம் எங்களால் மேற்கொள்ளப்பட்டுள்ள மற்றும் முன்னெடுக்கப்படவுள்ள அபிவிருத்திப்பணிகள் குறித்து மக்களுக்கு தெளிவூட்டவுள்ளதுடன் எமது நாட்டில் அமுல்செய்யப்படவுள்ள மக்கள்நல மற்றும் மேம்பாட்டுத்திட்டங்களை மீண்டும் இன்னுமொருவருக்குப் பொறுப்பளிக்காது தற்போதைய அரசாங்கத்தின் குறுகிய காலத்திற்குள்ளேயே நிறைவேற்றவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒருகோடி 65 இலட்சம் ரூபா நிதியொதுக்கீட்டில் மட்டக்களப்பு- களுவன்கேணி பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள மீனவர்களுக்கான பணிக்கட்டி (ஐஸ்) உற்பத்தி நிலையம், எரிபொருள் நிரப்பு நிலையம், சிற்றுண்டிச்சாலை , படகு இயந்திரம் திருத்தும் நிலையம் மற்றும் பயணிகள் விடுதி ஆகியவற்றின் திறப்பவிழா நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் மஹிந்த அமரவீர இதனைக் குறிப்பிட்டார்.
மாவட்ட அரசாங்க அதிபர் பீஎஸ்எம் சாள்ஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கை மற்றும் மாலைதீவிற்கான கூட்டுத்தாபன அபிவிருத்தி தலைமையதிகாரி லிபுஸ் சொக்குபுவா மற்றும் இராஜாங்க அமைச்சர் எம்எல்ஏஎம் ஹிஸ்புல்லாஹ் உட்பட பலர் பிரசன்னமாயிருந்தனர்.
மாவட்ட கடற்றொழில் நீரியல் வளங்கள் திணைக்களம் இங்கு கட்டடங்களை அமைத்துள்ளது. இதற்குத்தேவையான இயந்திரங்கள் மற்றும் உபகரணங்களை ஐரோப்பிய ஒன்றியம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இத்திட்டத்தின்மூலம் சுமார் மூவாயிரம் மீனவக்குடும்பங்கள் பயனடையுமென எதிர்பார்க்கப்படுகிறது.
இங்கு அமைச்சர் மஹிந்த அமரவீர மேலும் பேசுகையில்-- இந்த நாட்டில் சிங்களம் தமிழ் முஸ்லிம் என்ற இனபேதமின்றி அனைவரும் சமஉரிமையுடன் வாழ்வதற்கான சூழலை உருவாக்குவதே ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையிலான அரசாங்கத்தின் நோக்கமாகும். இதற்காக அதிகாரப்பகிர்வு , தேர்தல் முறைமாற்றம் போன்றவற்றை அடிப்படையாகக்கொண்டு அரசியல்யாப்புத்திருத்தம் செய்து இனப்பிரச்சினையைத் தீர்வை மிகக் குறுகிய காலத்திற்குள் எட்டுவதற்கான நம்பிக்கையுடன் செயற்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
கிழக்கு மாகாணத்தைப்பொறுத்தவரை விவசாயத்துறை மேலும் மேம்படுத்துவது இலகுவான காரியமல்ல. ஒரு நேரத்தில் வறட்சி மற்றைய காலத்தில் வெள்ளம் இதுபோன்ற அனர்த்த சவால்களுக்கு முகங்கொடுத்தே விவசாயிகள் தமது தொழிலில் ஈடுபடுகின்றனர். ஆனால் மீன்பிடித்துறையை பெரும் இலாபம் ஈட்டக்கூடிய துறையாக மாற்றுவது இயலுமா உள்ளது. மீன்பிடியில் அதிக தொழில்வாய்ப்பினை ஏற்படுத்துவது இலகுவானதாகும்.
குறிப்பாகச் சொல்லப்போனால் கிழக்கில் விசேடமாக மட்டக்களப்ப மாவட்டத்தில் உள்ள வளங்களில் மக்கள் உச்சபயனைப்பெறுவதில்லை. நாட்டின் ஏனைய பகுதி மீனவர்கள் அதிகமான இலாபத்தை ஈட்டும்போது மட்டக்களப்பு மீனவர்கள் மிகவும் குறைவான வருமனத்தையே பெறுகிறார்கள். எனவே இப்பிரதேச மீனவர்களிடமும் நாம் எதிர்பார்ப்பது கண்ணுக்கு எட்டும் தொலைதூர கடலில் மாத்திரம் மீன்பிடிக்காது சர்வதேச கடலிலும் எமக்குள்ள உரிமையைப் பயன்படுத்தி அதிக மீன்களை அறுவடையாகப்பெற்று மிகுந்த இலாபம் ஈட்டுவதற்கு தேவையான உபகரணங்கள், தொழில் நுட்பம் மற்றும் ஒத்துழைப்பினையும் வழங்குவதற்குத் தயாராகவுள்ளோம் என்றார்.

No comments:
Post a Comment