Wednesday, 11 January 2017

திருவாதிரையை முன்னிட்டு ஸ்ரீ மஹா கணபதி ஆலயத்தில் இடம்பெற்ற அன்னதான வைபவம்


துன்முகி வருட மார்கழித் திருவெம்பாவையின் இறுதிநாளான இன்றைய திருவாதிரைத் திருவிழாவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அன்னதான வைபவமொன்று ஆலையடிவேம்பு பிரதேச செயலக வளாகத்திலுள்ள அருள்மிகு ஸ்ரீ மஹா கணபதி ஆலயத்தில் இன்று (11) பகல் இடம்பெற்றிருந்தது.

மார்கழித் திருவாதிரையை முன்னிட்டு ஸ்ரீ மஹா கணபதி ஆலயத்தில் இடம்பெற்ற தாகசாந்தி வைபவம்


துன்முகி வருட மார்கழித் திருவெம்பாவையின் இறுதிநாளான இன்றைய திருவாதிரைத் திருவிழாவை முன்னிட்டு இந்துமகா சமுத்திரத் தீர்த்தோற்சவ ஊர்வலங்களில் பங்குபெறுகின்ற அடியவர்களின் தாகம் தீர்க்கும் தாகசாந்தி வைபவமொன்று ஆலையடிவேம்பு பிரதேச செயலக வளாகத்தில் கோயில் கொண்டுள்ள அருள்மிகு ஸ்ரீ மஹா கணபதிப் பெருமானின் திருத்தலத்தில் இன்று (11) காலை இடம்பெற்றது.

Tuesday, 10 January 2017

சின்னமுகத்துவாரம் ஆற்றுமுகத்திடல் சட்டவிரோதமாகத் திறப்பு; இரவோடிரவாக விஷமிகள் கைவரிசை


ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட சின்னமுகத்துவாரம் ஆற்றுமுகத்திடலானது நேற்றையதினம் (09) எவ்வித முன்னனுமதியுமின்றி அடையாளம் தெரியாத சில விஷமிகளால் சட்டவிரோதமான முறையில் திறந்துவிடப்பட்டதையடுத்து ஆலையடிவேம்பு பிரதேசத்திலுள்ள பல்லாயிரம் ஏக்கர் வேளாண்மைப் பயிர்ச்செய்கைக்கு அவசியமான தில்லையாற்று நீர் வீண் விரயமாகிக் கடலோடு கலக்கும் நிலை உருவாகியுள்ளது.

Friday, 6 January 2017

கண்ணகிகிராமத்தில் வாழ்வாதார உதவியாக ஆடுகள் வழங்கிவைப்பு


சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சின் வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ளக இடம்பெயர்ந்த மற்றும் மீளக்குடியமர்ந்த அகதிகளுக்கான வாழ்வாதார மேம்பாட்டுத் திட்டத்தின் நிதியொதுக்கீட்டின் கீழ் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கண்ணகிகிராமத்தில் தெரிவுசெய்யப்பட்ட பயனாளிகளுக்கான ஆடுகளைப் பகிர்ந்தளிக்கும் முதற்கட்ட வைபவம் நேற்று (05) மாலை இடம்பெற்றது.

Tuesday, 3 January 2017


Best opportunity for Last A/L, O/L & Non Education students or professional job seekers,contacting new NVQ,UGC,Government Certificate Courses & Higher Education Courses contents.....
*CAA (NVQ-3) *ICTT (NVQ -4) *Computer Science *Computerized Accounting *HND QS,CS *Bio Medical Technician ( NVQ 3/4, IVQ 5) *Bio Medical Equipment Technician ( NVQ 3/4, IVQ 5) *Mobile Repairing *Safety Management *Human Resource Management *CCTV Technician *Spoken English & Sinhala *Graphic Designing *Web Designing *Auto Cad *Cad & BS *Multimedia Technology

The courses will start january 2nd week. 
Register now

More Details Contact to KDMC Nenasala kalmunai Marketing officer : K.Kirushanthan
0757196520 / 0778361495
E-Mail - Krishanthankailash@gmail.com