என்.ஹரன்
வடக்கு கிழக்கு பகுதிகளில் இருந்து பாதயாத்திரையாக வனப்பகுதியூடாக செல்லும் அடியார்களுக்கு மலேரியா இரத்தப் பரிசோதனை உகந்தைதிருத்தல பகுதிகளில் தற்போது இடம் பெற்று வருகின்றது .
இலங்கை மலேரியா தடை இயக்கத்தின் (டெடா) பொத்துவில் பிரதேச காரியாலயத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ள இந்த குருதிப்பருசோதனை நிகழ்வானது கடந்த 20ம்திகதி வனவெளிப்பாதை திறக்கப்பட்டது முதல் பொத்துவில் பொறுப்பதிகாரி எல்.அருள்னேசன் தலமையிலான சுகாதார பணியாளர்களால் தற்போது மேற்கொள்ளப்படுகின்றது .
இலங்கையில் இருந்து மலேரியா நோய்த்தொற்றினை முற்றாக ஒளிக்கும் வேலைத்திட்டத்தின் ஒரு பகுதியாக பாதயாத்திரை அடியார்களுக்கு இக் குருதிப்பருசோதனையானது இடம் பெறுவதாகவும் மலேரியா நோய்த்தொற்றினை இனம்கானுவதற்கும், கட்டுப்படுத்துவதற்குமான குருதிப்பருசோதனை நிகழ்வில் இதுவரை சுமார் ஆயிரத்திற்கும் அதிகமானவர்களுக்கு மேற்கோள்ளப்பட்டு உடனுக்குடன் அவர்களது குருதிச்சோதனை முடிவுகளும் வழங்கப்படுவதாகவும் பொத்துவில் பொறுப்பதிகாரி எல்.அருள்னேசன் தெரிவித்தார்.
No comments:
Post a Comment