Friday, 4 July 2014
அக்கரைப்பற்றில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்று கொண்டிருந்த ஹைஏஸ் ரக வாகனமொன்று வவுனியா நொச்சிமோட்டைப் பகுதியில் வேகக் கட்டுப்பாட்டினை இழந்து மரமொன்றுடன் மோதியதில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் ஸ்தலத்திலேயே பலியாகியதுடன், மேலும் மூவர் படுகாயமடைந்துள்ளதாக ஓமந்தைப் பொலீசார் தெரிவித்துள்ளனர். இது குறித்து மேலும் தெரியவருவதாவது, அக்கரைப்பற்று பிரதேசத்தில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த ஹைஏஸ் ரக வாகனம் இன்றுமுற்பகல் 11.30மணியளவில் வவுனியா ஓமந்தையை அண்மித்துள்ள நொச்சிமோட்டைப் பகுதியில் வளைவொன்றில் திரும்பிய போது வேகக் கட்டுப்பாட்டினை இழந்து மரமொன்றுடன் மோதி விபத்துக்குள்ளானதில் வாகனம் முற்றாக சேதமடைந்துள்ளதுடன், அதில் பயணித்த பெண்ணொருவர் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளார். இந்த விபத்தின்போது படுகாயமடைந்து மூவர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment