Tuesday, 1 July 2014

பிரதேச அபிவிருத்தி வங்கியின் கல்முனை கிளையின் 21 வது ஆண்டு நிறைவு நிகழ்வுகள்

பிரதேச அபிவிருத்தி வங்கியின் கல்முனை கிளையின் 21 வது ஆண்டு நிறைவினை
முன்னிட்டு பல்வேறு நிகழ்வுகள் வங்கி கிளையில்  முகாமையாளர் என்.எம்.ஸியாத்
தலைமையில் சிறப்பான முறையில் இடம்பெற்றன.


இந்நிகழ்வின் ஆரம்ப நிகழ்வாக அதிதிகள் வரவேற்கப்பட்டு மதகுருமாரின் ஆசிர்வாதம்
இடம்பெறுவதனையும், அன்றையதினம் விசேடமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இரத்ததான
நிகழ்வில் வங்கி ஊழியர்களும் பொதுமக்களும் கலந்துகொண்டு இரத்ததானம்
செய்தமையினையும், நிகழ்வில் கலந்துகொண்ட வாடிக்கையாளர்களில் ஒரு
பகுதியினரையும், இவ்வங்கிக்கிளை ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்து அதன்
வாடிக்கையாளராக இருந்துவரும் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.ஜெகதீசனால் அதன்
முகாமையாளர் என்.எம்.ஸியாத்திடம் விசேட நினைவுச்சின்னம்
வழங்கிவைக்கப்பட்டமையும்  படங்களில் காணலாம்.

Displaying 20140625_094529.jpg Displaying SAM_2133.JPG

Displaying SAM_2052.JPG  Displaying SAM_2132.JPG

No comments: