Thursday, 24 April 2014

அரசுசாரா அமைப்புக்களின் முதற்காலாண்டுக்கான ஒருங்கிணைப்பு கூட்டம்

அம்பாறை மாவட்டத்தின் ஆலையடிவேம்பு பிரதேசத்தில் சேவையாற்றும் அரசசார்பற்ற நிறுவனங்கள் மற்றும் கிராமமட்டங்களில் தொழிற்படுகின்ற பொது அமைப்புக்களுக்களது இவ்வருடத்தின் முதற்காலாண்டுக்கான ஒருங்கிணைப்புக்குக் கூட்டமானது இன்று 22-04-2014, செவ்வாய்க்கிழமை காலை ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வேதநாயகம் ஜெகதீசன் தலைமையில் ஆலையடிவேம்பு பிரதேச செயலகக் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

அம்பாறை மாவட்ட செயலக அரசசார்பற்ற அமைப்புக்களின் ஒருங்கிணைப்பு உத்தியோகத்தர் எம்.ஐ.எம்.இர்பான் பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட இந்நிகழ்வில் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தின் திட்டமிடல் பிரிவின் உதவித் திட்டமிடல் பணிப்பாளர் திருமதி. திலகராணி கிருபைராஜா, அபிவிருத்தி இணைப்பு உத்தியோகத்தர் எஸ்.எல்.எம்.அன்வர், கிராம சேவகர்களுக்கான நிருவாக உத்தியோகத்தர் ஈ.குலசேகரன், பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி.பாத்திமா சிபாயா றமீஸ், சமுகசேவைகள் உத்தியோகத்தர் எஸ்.எம்.எம்.அமீன், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி.சுகந்தினி தனராஜன், ஆலையடிவேம்பு பிரதேச அரசசார்பற்ற அமைப்புக்களுக்கான இணையத்தின் தலைவர் வி.பரமசிங்கம் உட்பட ஆலையடிவேம்பு பிரதேசத்தில் தொழிற்படுகின்ற அரசசார்பற்ற மற்றும் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், கிராமசேவை உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இக்கூட்டத்தில் 2014 ஆம் ஆண்டின் முதற்காலாண்டுப் பகுதியில் இப்பிரதேசத்தில் தொழிற்படும் அரசசார்பற்ற அமைப்புக்களின் பிரதிநிதிகளால் தத்தமது நிறுவனங்கள் மூலம் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி வேலைத்திட்டங்கள், அதனைத்தொடர்ந்து அடுத்த 9 மாதங்களுக்காகத் திட்டமிடப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டதுடன் அவற்றுடன் இணைந்தவகையில் ஆலையடிவேம்பு பிரதேச மக்களின் வாழ்வாதார முன்னேற்றத்திற்கான உதவிகள் மற்றும் அபிவிருத்தி வேலைத்திட்டங்களில் பிரதேச செயலகத்துடனும் மாவட்ட செயலகத்தின் வழிகாட்டல்களோடும் இணைந்து பணியாற்றுதல் தொடர்பில் பிரதேச செயலாளரும், மாவட்ட செயலக அரசசார்பற்ற அமைப்புக்களின் ஒருங்கிணைப்பு உத்தியோகத்தரும் பங்குபற்றுனர்களுடன் தமது கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டனர்.
Divisional Secretariat Alayadivembu's photo.


(8 photos)
Divisional Secretariat Alayadivembu's photo.
Divisional Secretariat Alayadivembu's photo.

No comments: