கிழக்கு மாகாண சமுகசேவைகள் திணைக்களத்தின் அனுசரணையுடன் ஆலையடிவேம்பு பிரதேச செயலக சமுகசேவைகள் பிரிவினால் அக்கரைப்பற்று – 7/2 கிராமசேவகர் பிரிவில் வசிக்கும் வலுவிழந்த ஒரு பயனாளிக்கு சக்கர நாற்காலியொன்றினை அன்பளிப்பாக வழங்கும் நிகழ்வு நேற்று, 23-04-2014 புதன்கிழமை ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.
ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வேதநாயகம் ஜெகதீசனால் அன்பளிப்புச் செய்யப்பட்ட இச்சக்கர நாற்காலியைக் குறித்த பயனாளியின் சார்பில் அவரது மனைவி பெற்றுக்கொண்டார்.
இந்நிகழ்வில் பிரதேச செயலக சமுகசேவைகள் உத்தியோகத்தர் எஸ்.எம்.எம்.அமீன், பிரதம முகாமைத்துவ உதவியாளர் எம்.சி.ஏ.எம்.றகீப், முகாமைத்துவ உதவியாளர் எம்.ஏ.பாயிஸ், அபிவிருத்தி உத்தியோகத்தர்களான கே.தெய்வேந்திரன், ஆர்.சிவானந்தம் மற்றும் குறித்த கிராமசேவகர் பிரிவுக்கான கிராமசேவை உத்தியோகத்தர் பி.திருநாவுக்கரசு, பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆர்.முரளிதர்ஷன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment