Sunday, 13 April 2014

பெற்றோர்களுக்கு முன்பிள்ளைப்பருவம் தொடர்பாக விழிப்புணர்வூட்டல்.

சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சின் அனுசரணையுடன் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தின் சிறுவர் மற்றும் மகளிர் அபிவிருத்திப் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட முன்பிள்ளைப்பருவ விருத்தி தொடர்பில் பெற்றோர்களுக்கு விழிப்புணர்வூட்டும் நிகழ்வு இன்று 02-04-2014, புதன்கிழமை ஆலையடிவேம்பு பிரதேச செயலகக் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

ஆரம்ப நிகழ்வாக முன்பிள்ளைப்பராய அபிவிருத்தி உத்தியோகத்தர் வை.உஜெயந்தனால் குறித்த நிகழ்வின் நோக்கம் மற்றும் முக்கியத்துவம் தொடர்பான அறிமுகம் இடம்பெற்றதுடன் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.ஜெகதீசன், உதவித் திட்டமிடல் பணிப்பாளர் திருமதி.திலகராணி கிருபைராஜா மற்றும் ஆலையடிவேம்பு கோட்டக்கல்விப் பணிப்பாளர் வி.குணாளன் ஆகியோர் வளவாளர்களாகக் கலந்துகொண்டு அங்கு சமுகமளித்திருந்த பெற்றோர்களிடையே தாம் தெரிவுசெய்த விடயங்கள் தொடர்பில் தமது கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டனர்.

இந்நிகழ்வின்போது முன்பிள்ளைப்பராய அபிவிருத்தி உத்தியோகத்தர் வை.உஜெயந்தனால் உருவாக்கப்பட்ட முன்பிள்ளைப்பருவ விருத்தி தொடர்பில் பெற்றோர்களுக்கு வழிகாட்டும் கைநூல் வெளியிடப்பட்டதுடன் அதன் முதற்பிரதியினைப் பிரதேச செயலாளர் பெற்றுக்கொண்டார். அவரைத் தொடர்ந்து நிகழ்வுக்குச் சமுகமளித்திருந்த ஏனைய வளவாளர்களும் பெற்றோர்களும் தமக்கான பிரதிகளைப் பெற்றுக்கொண்டனர்.

இந்நிகழ்வில் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தின் சிறுவர் மற்றும் மகளிர் அபிவிருத்திப் பிரிவிலிருந்து மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி.பாத்திமா சிபாயா றமீஸ், உளவள ஆலோசகர் திருமதி.சப்றினா ரஸீன், சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர் எம்.பி.ஏ.வஸீம், சிறுவர் உள மற்றும் சமுக பாதுகாப்பு உத்தியோகத்தர் எஸ்.நிசாந்தினி மற்றும் சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர் திருமதி.யசோதா கபிலன் ஆகியோரும் பங்குபற்றியிருந்தனர்.
moor photo.......click.. (25 photos)

No comments: