Tuesday, 29 April 2014

ஆலையடிவேம்பு பிரதேச செயலக தமிழ் சிக்கள புத்தாண்டு விளையாட்டு விழா...

படம்- என்.ஹரன்
ஆலையடிவேம்பு பிரதேச செயலக தமிழ் சிக்கள  புத்தாண்டு விளையாட்டு விழாவின் ஆரம்ப நிகழ்வான  சைக்கிள் ஓட்டப் போட்டியினை பிரதேச செயலாளர் வி.யெகதீசன் உடன்  பராளுமன்ற உறுப்பினர் பி.பியசேன  கொடி அசைத்து ஆரம்பித்து வைப்பதனையும் மரதன் ஓட்டப் போட்டியில் வெற்றி பெற்ற வீரரினை   பிரதேச செயலாளர் வி.யெகதீசன் கைலாகு குடுத்து வரவேற் பதனையும் படத்தில் காணலாம் 

Displaying SN851912.JPG Displaying SN851920.JPG
Displaying SN851922.jpg 

Monday, 28 April 2014

ஆலையடிவேம்பு பிரதேச செயலக சித்திரைப் புத்தாண்டு விளையாட்டு விழா 29.04.2014


தலமை ---ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.ஜெகதீசன்
 இடம்-------அக்கரைப்பற்று தருமசங்கரி விளையாட்டு மைதானத்தில்

 






தொடர்தும் இனைந்திருங்கள்

 உடனுக்குடன் பதிவுகளை 


கண்டு மகிழுங்கள்...

சமூக அணிதிரட்டல் செயலமர்வு

- நௌசாத் முகம்மட் இஸ்மாயில் -

அம்பாறை மாவட்ட அரசசார்பற்ற அமைப்புக்களின் இணையத்தின் ஏற்பாட்டில் சிவில் சமூக பங்குபற்றுதலுடனான சமூக அணிதிரட்டல் செயலமர்வு

டயகோணியா சர்வதேச நிறுவனத்தின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் அம்பாறை மாவட்ட அரசசார்பற்ற அமைப்புக்களின் இணையத்தினால் சமூக எமது அங்கத்துவ அமைப்புக்களின் அணிதிரட்டல் திறனை விருத்தி செய்யும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட இவ்வாண்டுக்கான செயற்பாடுகளினால் ஒன்றான ' சிவில் சமூகப் பங்குபற்றுதலுடனான சமூக அணிதிரட்டல்' செயலமர்வொன்றை அன்மையில் எமது இணையத்தின் கேட்போர் கூட மண்டபத்தில் நடாத்தியது.
  
 

 இதன்போது தற்காலத்தில் எமது அங்கத்துவ அமைப்புக்கள் எதிர்நோக்குகின்ற நடைமுறைப்பிரச்சினைகள் , அரச மட்டத்தில் எழுகின்ற நடைமுறைச் சிக்கல்கள் மற்றும் தனியார் துறை நிறுவனங்களின் அபரிவிதமான முன்னெடுப்புக்களால் ஏற்படும் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதுடன் அவர்கள் எவ்வாறான யுக்திகளை கையாண்டு மக்களை தமது செயற்பாடுகளுடன் ஒருங்கிணைக்க வேண்டும் என்பது பற்றியும் தெளிவு படுத்தப்பட்டது. இந்நிகழ்வை ஆரம்பித்து வைத்த இணையத்தின் தவிசாளர் திரு: வ.பரமசிங்கம் அவர்கள் தெரிவிக்கையில் இச்செயலமர்வுக்கு வந்திருக்கின்ற எல்லோரையும் வரவேற்றுக்கொண்டு தற்காலத்தில் சமூகத்தை தமது செயற்பாடுகளோடு ஒருமித்த் வகையில் ஒன்றுதிரட்டுவது எனும் பொழுது மிகவும் சிரமத்திற்குரிய ஒன்றாக இருக்கின்றது. இதனை எவ்வாறு நாங்கள் எங்களுடைய இலக்கை அடையும் வகையில் ஒரு முறையாக மாற்றிப்பயன்படுத்துவதற்கான உபாயங்களை இப்பயிற்சியின் மூலம் கற்றுத்தெரிந்து கொள்ள வேண்டும் எனக்குறிப்பிட்டார். இந்நிகழ்வில் இணையத்தின் பங்காளர் அமைப்புக்களின் பிரதிநிதிகள் மட்டுமல்லாது கல்முனைத் தமிழ்ப்பிரிவு பிரதேச செயலகத்தினுடைய சிறுவர் பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டு தங்களுடைய கருத்துப்பரிமாறல்களையும் வழங்கினர். இந்நிகழ்வை சிரேஸ்ட வளதாரியும், எஸ்.எல்.சீ.டீ.எப். நிறுவனத்தின் நிகழ்ச்சித் திட்ட உத்தியோகத்தருமான திரு: ஏ.சொர்ணலிங்கம் அவர்கள் சிறப்பாக சட்டகங்கள் மற்றும் புதிய சமூக அணிதிரட்டல் யுக்திகள், படிமுறைகள் போன்றவற்றைக் கையாண்டு துள்ளியமாகத் தெளிவுபடுத்தியமை குறிப்பிடத்தக்தாகும்.

சமுர்த்தி வங்கிச்சங்க சித்திரைப் புத்தாண்டு விளையாட்டு விழா

ஆலையடிவேம்பு வடக்கு வலய சமுர்த்தி வங்கிச்சங்கம் ஏற்பாடு செய்த மாபெரும் வாழ்வின் எழுச்சி சித்திரைப் புத்தாண்டு விளையாட்டு விழா நேற்று, 27-04-2014 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் அக்கரைப்பற்று தருமசங்கரி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

குறித்த வங்கிச்சங்க முகாமையாளர் திருமதி.ரி.கமலப்பிரபா தலைமையில் நடைபெற்ற இவ்விளையாட்டு விழாவினை அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பி.எச்.பியசேன பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு தேசியக்கொடியேற்றி ஆரம்பித்துவைத்தார். மேலும் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.ஜெகதீசன் மற்றும் ஆலையடிவேம்பு பிரதேச சபையின் தவிசாளர் கே.இரத்தினவேல் ஆகியோர் இவ்விழாவில் கௌரவ அதிதிகளாகக் கலந்து சிறப்பித்ததுடன் திவிநெகும திணைக்களத்தின் உயர்மட்ட அதிகாரிகள் அனைவரும் இவ்விளையாட்டு விழாவில் பிரசன்னமாயிருந்தனர். சம்பிரதாயபூர்வமான வைபவங்களைத் தொடர்ந்து அதிதிகளின் உரைகள் இடம்பெற்றன.

தொடர்ந்து தமிழர் பாரம்பரிய விளையாட்டுக்களான கிடுகிழைத்தல், தேங்காய் துருவுதல் உட்பட சிறுவர் விளையாட்டுக்களான மிட்டாய் பொறுக்குதல், தாரா ஓட்டம், முயல் ஓட்டம், தண்ணீர்ப்போத்தல் நிரப்புதல், வினோத உடைப்போட்டி என்பன நடாத்தப்பட்டதுடன் வெற்றி பெற்றவர்களுக்கு அதிதிகளால் பரிசுகளும் வழங்கிவைக்கப்பட்டன.

இதன்போது புத்தாண்டு காலத்தில் குறித்த சமுர்த்தி வங்கியில் அதிகளவில் சேமிப்பினை மேற்கொண்ட பயனாளிகள், அத்துடன் பயனாளிகளின் சேமிப்புக்களை ஊக்குவிப்பதில் சிறப்பாகச் செயற்பட்ட சமுர்த்தி உத்தியோகத்தர்கள் உட்படப் பலர் பாராட்டிக் கௌரவிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Saturday, 26 April 2014

சக்கர நாற்காலி அன்பளிப்பாக வழங்கப்பட்ட நிகழ்வு"


கிழக்கு மாகாண சமுகசேவைகள் திணைக்களத்தின் அனுசரணையுடன் ஆலையடிவேம்பு பிரதேச செயலக சமுகசேவைகள் பிரிவினால் அக்கரைப்பற்று – 7/2 கிராமசேவகர் பிரிவில் வசிக்கும் வலுவிழந்த ஒரு பயனாளிக்கு சக்கர நாற்காலியொன்றினை அன்பளிப்பாக வழங்கும் நிகழ்வு நேற்று, 23-04-2014 புதன்கிழமை ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.

ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வேதநாயகம் ஜெகதீசனால் அன்பளிப்புச் செய்யப்பட்ட இச்சக்கர நாற்காலியைக் குறித்த பயனாளியின் சார்பில் அவரது மனைவி பெற்றுக்கொண்டார்.

இந்நிகழ்வில் பிரதேச செயலக சமுகசேவைகள் உத்தியோகத்தர் எஸ்.எம்.எம்.அமீன், பிரதம முகாமைத்துவ உதவியாளர் எம்.சி.ஏ.எம்.றகீப், முகாமைத்துவ உதவியாளர் எம்.ஏ.பாயிஸ், அபிவிருத்தி உத்தியோகத்தர்களான கே.தெய்வேந்திரன், ஆர்.சிவானந்தம் மற்றும் குறித்த கிராமசேவகர் பிரிவுக்கான கிராமசேவை உத்தியோகத்தர் பி.திருநாவுக்கரசு, பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆர்.முரளிதர்ஷன் ஆகியோர் கலந்துகொண்டனர்.


Friday, 25 April 2014

அலுவலக அடையாள அட்டைகள் வழங்கும் நிகழ்வு

ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தின் சிறுவர் மற்றும் மகளிர் அபிவிருத்திப் பிரிவு உத்தியோகத்தர்களுக்கு அலுவலக அடையாள அட்டைகள் வழங்கும் நிகழ்வு   பிரதேச செயலாளர் வேதநாயகம் ஜெகதீசன் தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது குறித்த பிரிவில் கடமையாற்றும் மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி.பாத்திமா சிபாயா றமீஸ், முன்பிள்ளைப்பராய அபிவிருத்தி உத்தியோகத்தர் வை.உஜெயந்தன், உளவள ஆலோசகர் திருமதி.சப்றினா ரஸீன், சிறுவர் உள மற்றும் சமுக பாதுகாப்பு உத்தியோகத்தர் எஸ்.நிசாந்தினி மற்றும் சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர் திருமதி.யசோதா கபிலன் ஆகியோர் தமக்கான அலுவலக அடையாள அட்டைகளைப் பிரதேச செயலாளரிடமிருந்து பெற்றுக்கொண்டனர்.

இந்நிகழ்வில் ஆலையடிவேம்பு பிரதேச செயலகப் பதவிநிலை உதவியாளர் ஏ.எல்.எம்.பஸீல், பிரதம முகாமைத்துவ உதவியாளர் ஏ.சசீந்திரன் ஆகியோரும் பங்குபற்றினர்.

Thursday, 24 April 2014

அரசுசாரா அமைப்புக்களின் முதற்காலாண்டுக்கான ஒருங்கிணைப்பு கூட்டம்

அம்பாறை மாவட்டத்தின் ஆலையடிவேம்பு பிரதேசத்தில் சேவையாற்றும் அரசசார்பற்ற நிறுவனங்கள் மற்றும் கிராமமட்டங்களில் தொழிற்படுகின்ற பொது அமைப்புக்களுக்களது இவ்வருடத்தின் முதற்காலாண்டுக்கான ஒருங்கிணைப்புக்குக் கூட்டமானது இன்று 22-04-2014, செவ்வாய்க்கிழமை காலை ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வேதநாயகம் ஜெகதீசன் தலைமையில் ஆலையடிவேம்பு பிரதேச செயலகக் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

அம்பாறை மாவட்ட செயலக அரசசார்பற்ற அமைப்புக்களின் ஒருங்கிணைப்பு உத்தியோகத்தர் எம்.ஐ.எம்.இர்பான் பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட இந்நிகழ்வில் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தின் திட்டமிடல் பிரிவின் உதவித் திட்டமிடல் பணிப்பாளர் திருமதி. திலகராணி கிருபைராஜா, அபிவிருத்தி இணைப்பு உத்தியோகத்தர் எஸ்.எல்.எம்.அன்வர், கிராம சேவகர்களுக்கான நிருவாக உத்தியோகத்தர் ஈ.குலசேகரன், பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி.பாத்திமா சிபாயா றமீஸ், சமுகசேவைகள் உத்தியோகத்தர் எஸ்.எம்.எம்.அமீன், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி.சுகந்தினி தனராஜன், ஆலையடிவேம்பு பிரதேச அரசசார்பற்ற அமைப்புக்களுக்கான இணையத்தின் தலைவர் வி.பரமசிங்கம் உட்பட ஆலையடிவேம்பு பிரதேசத்தில் தொழிற்படுகின்ற அரசசார்பற்ற மற்றும் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், கிராமசேவை உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இக்கூட்டத்தில் 2014 ஆம் ஆண்டின் முதற்காலாண்டுப் பகுதியில் இப்பிரதேசத்தில் தொழிற்படும் அரசசார்பற்ற அமைப்புக்களின் பிரதிநிதிகளால் தத்தமது நிறுவனங்கள் மூலம் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி வேலைத்திட்டங்கள், அதனைத்தொடர்ந்து அடுத்த 9 மாதங்களுக்காகத் திட்டமிடப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டதுடன் அவற்றுடன் இணைந்தவகையில் ஆலையடிவேம்பு பிரதேச மக்களின் வாழ்வாதார முன்னேற்றத்திற்கான உதவிகள் மற்றும் அபிவிருத்தி வேலைத்திட்டங்களில் பிரதேச செயலகத்துடனும் மாவட்ட செயலகத்தின் வழிகாட்டல்களோடும் இணைந்து பணியாற்றுதல் தொடர்பில் பிரதேச செயலாளரும், மாவட்ட செயலக அரசசார்பற்ற அமைப்புக்களின் ஒருங்கிணைப்பு உத்தியோகத்தரும் பங்குபற்றுனர்களுடன் தமது கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டனர்.
Divisional Secretariat Alayadivembu's photo.


(8 photos)
Divisional Secretariat Alayadivembu's photo.
Divisional Secretariat Alayadivembu's photo.

Wednesday, 23 April 2014

சாயிபாபா மகாசமாதியடைந்து மூண்றாண்டுகள் நினைவுதின நிகழ்வு

என்.ஹரன்

ஆலையடிவேம்பு  ஸ்ரீ சத்தியசாயிபாபா நிலையத்தினரால்  பகவானின் திருவுருவம் தாங்கிய ஊர்தி வீதிஉலா வருவதனையும் கலந்து கொண்ட சாயிபக்தர்களையும் Displaying Untitled-1.jpg








கானலாம்




Monday, 21 April 2014

ஆலையடிவேம்பு பிரதேச மக்கள்நலத்திட்டத்தில் பியசேன எம்.பி

 என்.ஹரன்
ஆலையடிவேம்பு பிரதேச மக்கள்நலத்திட்டத்தில் பியசேன எம்.பி
பிரதேச செயலகப்பிருவில் உள்ள 22கிராம சேவகர் பிரிவில் வாழும் மக்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் அரசின் திவினெகும வாழ்வெளிச்சித்திட்டத்தில் பா.உ.பி.எச்.பியசேன மக்களது பிரச்சினைகளை கேட்டறிவதனையும் கலந்துகொண்டோரையும் படத்தில் கானலாம்      
 




.


Monday, 14 April 2014

இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

அனைத்து இனையபாவனையாளர்களுக்கும் எமது panankadu.com நிறுவன தித்திக்கும் தமிழ் சிங்கள புத்தாண்டு
நல்வாழ்த்துக்கள்




எமது நிறுவன ஸ்தாபகர் நடராஜன் ஹரன் 
அவர்களின் வாழ்த்துச்செய்தி- மலர்ந்திருக்கும் சித்திரைப்புத்தாண்டு அனைவருக்கும் வளமான நிகழ்காலத்தைஉங்களுக்கு இனிமையையும்சுபீட்சத்தினையும்வெற்றியையும் ஏற்படுத்தும் புத்தாண்டாக அமைய இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் வாழ்துகிறேன். 


ஆலையடிவேம்பு பிரதேசலாளர் வீ.ஜெகதீசன் 


அவர்களின் வாழ்த்துச்செய்தி-  இச் சித்திரைப்புத்தாண்டு எமது பிரதேச வாழ் அனைத்து மக்களதும் வாழ்வாதாரத்தில் சுபிட்ஷத்தை ஏற்படுத்தும் ஆண்டாக அமைய வாழ்த்துகின்றேன்




பாராளுமன்ற உறுப்பினரின் பி.எச்.பியசேன



அவர்களின் வாழ்த்துச்செய்தி- இச் சித்திரைப்புத்தாண்டு எமது தமிழ் மக்களினது சந்தோஷம் நிலைக்கும் நிம்மதி நிறைந்த ஆண்டாக அமைய வாழ்த்துகின்றேன்



ங்கள் வாழ்த்துக்களையும் இந்தப்பகுதியில் தெரிவிக்க  
கீழுள்ள comment ல் TIPE செய்யுங்கள் அல்லது  sms அனுப்புக
 ur name + wish + and =send to 89000020 (or) 0777514279 அனுப்புங்கள் or e-mail

Sunday, 13 April 2014

"15.04.2014 விடுமுறை தினம் பற்றிய அறிவித்தல்"

தமிழ், சிங்கள சித்திரைப் புத்தாண்டினை முன்னிட்டு எதிர்வரும் 15-04-2014, செவ்வாய்க்கிழமை பொது மற்றும் வங்கி விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கைப் பொது நிருவாக ...
மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சினால் விடுக்கப்பட்டுள்ள இவ்வறிவித்தல் தொடர்பான சுற்றுநிருபம் விரைவில் வெளியிடப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னர் குறித்த நாளானது விசேட வங்கி விடுமுறையாக மட்டுமே
 பிரகடனப்படுத்தப்பட்டிருந்தமை
 இங்கு குறிப்பிடத்தக்கது.
Photo: "விடுமுறை தினம் பற்றிய அறிவித்தல்"

தமிழ், சிங்கள சித்திரைப் புத்தாண்டினை முன்னிட்டு எதிர்வரும் 15-04-2014, செவ்வாய்க்கிழமை பொது மற்றும் வங்கி விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கைப் பொது நிருவாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சினால் விடுக்கப்பட்டுள்ள இவ்வறிவித்தல் தொடர்பான சுற்றுநிருபம் விரைவில் வெளியிடப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னர் குறித்த நாளானது  விசேட வங்கி விடுமுறையாக மட்டுமே பிரகடனப்படுத்தப்பட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

ஆலையடிவேம்பில் நடைபெறும் வாழ்வின் எழுச்சி புதுவருடச் சந்தை

ஆலையடிவேம்பு, அக்கரைப்பற்று மற்றும் அட்டாளைச்சேனை பிரதேசங்களின் திவிநெகும அபிவிருத்தித்திட்டப் பயனாளிகள் ஒன்றிணைந்து எதிர்வரும் தமிழ் – சிங்கள சித்திரைப் புத்தாண்டினை முன்னிட்டு அவர்களால் உற்பத்தி செய்யப்பட்ட பாவனைப் பொருட்களை மலிவான விலையில் ஒரேயிடத்தில் பெற்றுக்கொள்ளக்கூடியவகையில் நடாத்துகின்ற வாழ்வின் எழுச்சி புதுவருடச் சந்தை இன்று 10-04-2014, வியாழக்கிழமை காலை அக்கரைப்பற்று, சாகாம வீதியில் வெலிங்டன் திரையரங்கிற்கு அருகாமையில் உத்தியோகபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டுள்ளது.

திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பி.எச்.பியசேன பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு தேசியக்கொடியேற்றி ஆரம்பித்துவைத்த இந்நிகழ்வில் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.ஜெகதீசன் சிறப்பு அதிதியாகவும், திவிநெகும திணைக்களத்தின் அம்பாறை மாவட்ட அலுவலகம், கொழும்பிலுள்ள தலைமையகம் மற்றும் ஆலையடிவேம்பு, அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை பிரதேச அலுவலகங்களின் பிரதிநிதிகள் ஆகியோரும் பங்குபற்றினர்.

இந்நிகழ்வில் அதிதிகளை வரவேற்று நடாத்தப்பட்ட கலைநிகழ்வுகளில் பங்குபற்றிய சிறார்கள் பரிசுகளைப் பெற்றுக்கொண்டதுடன், வறிய மாணவர்களுக்கான சிசுதிரிய புலமைப்பரிசில் கொடுப்பனவுகள் மற்றும் பயனாளிகளுக்கான சமுர்த்தி முத்திரைக் கொடுப்பனவுகள் என்பனவும் அதிதிகளால் வழங்கிவைக்கப்பட்டன. இதன்போது தத்தமது சேவைப் பிரதேசங்களில் பயனாளிகளின் சேமிப்புக்களை அதிகரித்துக்கொடுத்த சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் சான்றிதழ்கள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர்.

இவ் வாழ்வின் எழுச்சி புதுவருடச் சந்தையில் மேற்குறிப்பிட்ட பிரதேசங்களில் வாழும் மூவினங்களையும் சேர்ந்த திவிநெகும (சமுர்த்தி) பயனாளிக் குடும்பங்களால் உற்பத்தி செய்யப்பட்ட துணிமணிகள், புதுவருடத் தின்பண்டங்கள், மரக்கறிகள், மாப்பொருள் உற்பத்திகள், மலர்ச்செடிகள், மட்பாண்டங்கள் உட்படப் பலவிதமான பொருட்கள் இங்கு மலிவான விலையில் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்துடன் இச்சந்தையானது இன்று மாலை 6.00 மணிவரை நடைபெறவுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

"சுயதொழில் ஊக்குவிப்புக்கான நன்கொடை வழங்கிவைப்பு"

சேவ் த சில்ரன் எனப்படும் சர்வதேச அரசுசாரா நிறுவனத்தின் அனுசரணையுடன் அக்கரைப்பற்று – 8/2 இல் தொழிற்படும் பெண்கள் அபிவிருத்தி நிறுவனத்தினால் (WDF) அளிக்கம்பை, தேவகிராமத்திலுள்ள வறுமைக் கோட்டின்கீழ் வாழுகின்ற பெண் தலைமை தாங்கும் குடும்பமொன்றின் வாழ்வாதார மேம்பாட்டின் பொருட்டு ஆடு வளர்ப்பிற்கான நன்கொடை வழங்கும் நிகழ்வு இன்று 09-04-2014, புதன்கிழமை காலை ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.

பிரதேச செயலாளர் வேதநாயகம் ஜெகதீசன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் ரி.சின்னமசக்கா, ரி.மயூரன் ஆகிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பயனாளிகள் ரூபாய். 25,000 நன்கொடையைப் பெற்றுக்கொண்டனர்.

இதன்போது பெண்கள் அபிவிருத்தி நிறுவனத்தின் திட்ட உத்தியோகத்தர் ஆர்.பிரபாகரன், தேவகிராமத் தலைவர் வி.விமல், அளிக்கம்பை கிராமசேவை உத்தியோகத்தர் கே.லோகநாதன் ஆகியோரும் உடனிருந்தனர்.
Photo: "சுயதொழில் ஊக்குவிப்புக்கான நன்கொடை வழங்கிவைப்பு"

சேவ் த சில்ரன் எனப்படும் சர்வதேச அரசுசாரா நிறுவனத்தின் அனுசரணையுடன் அக்கரைப்பற்று – 8/2 இல் தொழிற்படும் பெண்கள் அபிவிருத்தி நிறுவனத்தினால் (WDF) அளிக்கம்பை, தேவகிராமத்திலுள்ள வறுமைக் கோட்டின்கீழ் வாழுகின்ற பெண் தலைமை தாங்கும் குடும்பமொன்றின் வாழ்வாதார மேம்பாட்டின் பொருட்டு ஆடு வளர்ப்பிற்கான நன்கொடை வழங்கும் நிகழ்வு இன்று 09-04-2014, புதன்கிழமை காலை ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.

பிரதேச செயலாளர் வேதநாயகம் ஜெகதீசன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் ரி.சின்னமசக்கா, ரி.மயூரன் ஆகிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பயனாளிகள் ரூபாய். 25,000 நன்கொடையைப் பெற்றுக்கொண்டனர்.

இதன்போது பெண்கள் அபிவிருத்தி நிறுவனத்தின் திட்ட உத்தியோகத்தர் ஆர்.பிரபாகரன், தேவகிராமத் தலைவர் வி.விமல், அளிக்கம்பை கிராமசேவை உத்தியோகத்தர் கே.லோகநாதன் ஆகியோரும் உடனிருந்தனர்.4

அக்கரைப்பற்று – 7/2 கிராமசேவகர் பிரிவில் இடம்பெற்ற நடமாடும் சேவை


  1. பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் ‘கிராமம் கிராமமாக – வீடு வீடாக’ எனும் கிராம மக்களுக்கான உபகார வேலைத்திட்டத்தின் அடிப்படையில் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இறுதியானதும் அக்கரைப்பற்று – 7/2 கிராமசேவகர் பிரிவுக்கானதுமான நடமாடும் சேவை இன்று 08-04-2014, செவ்வாய்க்கிழமை அக்கரைப்பற்று – 7/2, சுவாமி விபுலானந்தா மாணவர் இல்லத்தில் நடைபெற்றது.

    கடந்த நாட்களைப்போன்றே இந்நடமாடும் சேவையினையும் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வேதநாயகம் ஜெகதீசன் காலை 9.00 மணியளவில் தேசியக்கொடியேற்றி ஆரம்பித்துவைத்தார். இறைவணக்கத்தின் பின்னர் சின்னமுகத்துவாரம் கிராமசேவகர் பிரிவுக்கான கிராமசேவை உத்தியோகத்தர் பி.திருநாவுக்கரசு வரவேற்புரையாற்றியதைத் தொடர்ந்து அக்கிராமசேவகர் பிரிவுக்கான பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆர்.முரளிதர்ஷன் தனது பிரதேசம் தொடர்பான விளக்கவுரையினை வழங்கினார். அதன் பின்னர் குறித்த நடமாடும் சேவையினை உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கும்முகமாக பிரதேச செயலாளரது ஆரம்ப உரை இடம்பெற்றது.

    அதனைத்தொடர்ந்து மேடையேற்றப்பட்ட கலை, கலாசார நிகழ்வுகளில் தமது திறமைகளை வெளிப்படுத்திய சிறார்களுக்குப் பிரதேச செயலாளர், கிராமசேவை உத்தியோகத்தர், மேலதிக மாவட்டப் பதிவாளர், பிரதம முகாமைத்துவ உதவியாளர் மற்றும் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆகியோர் பரிசுகளை வழங்கிவைத்தார்கள்.

    இந்நடமாடும் சேவையில் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தின் உத்தியோகத்தர்கள் மற்றும் சமுர்த்திப் பிரிவுக்கான உத்தியோகத்தர்களுடன் பொலிஸ் மற்றும் ஏனைய அரச பொதுத்துறை சார்ந்த நிறுவனங்களின் பிரதிநிதிகளும் பங்கேற்று அக்கரைப்பற்று – 7/2 கிராமசேவகர் பிரிவுப் பொதுமக்களுக்கான சேவைகளை வழங்கினர்.

    மேலும், கடந்த 24-02-2014 முதல் இன்றுவரையான காலப்பகுதியில் எமது ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள 22 கிராமசேவகர் பிரிவுகளிலும் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தினால் நடாத்தப்பட்ட நடமாடும் சேவைகளில் இப்பிரதேச மக்களின் சேவைக்காகச் சகல வழிகளிலும் தம்மை அர்ப்பணித்துச் சேவையாற்றிய ஆலையடிவேம்பு பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், ஏனைய அரச பொதுத்துறை சார்ந்த நிறுவனங்களின் பிரதிநிதிகள், அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள், பாடசாலை அதிபர்கள், கிராமிய மற்றும் மகளிர் கிராமிய அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், திவிநெகும (சமுர்த்தி) திணைக்கள உத்தியோகத்தர்கள், பிரதேச இளைஞர் கழக உறுப்பினர்கள் மற்றும் ஒத்துழைப்பு வழங்கிய பொதுமக்கள் அனைவருக்கும் பிரதேச செயலாளரின் சார்பில் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
    click... (41 photos)