தேசத்துக்கோயிலென அழைக்கப்படும் திருக்கோவில் ஸ்ரீ
சித்திரவேலாயுத சுவாமி ஆலய ஆடிஅமாவாசை உட்சவ திருவிழா 20.07.2013
கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 06.08.2013
தீர்தோட்சவத்துடன் முடிவடையும் இதில் 07.08.2013
பூங்காவனத் திருவிழாவும் 08.08.2013 வைரவர் பூசையும் நடைபெறவுள்ளது.
Friday, 19 July 2013
கண்ணகி கிராமத்தில் விளையாட்டு மைதானத்தின் பார்வையாளர் அரங்கிற்கான அடிக்கல் நடும் நிகழ்வு
ஆலையடிவேம்பு பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட கண்ணகி கிராமத்தில் விளையாட்டு மைதானத்தின் பார்வையாளர் அரங்கிற்கான கட்டுமான
அடிக்கல் நடும் நிகழ்வில் 2013.07.19 மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பி.எச்.பியசேன ஆலையடிவேம்பு பிரதேசசெயலாளர் வீ.ஜெகதீசன் கலந்து கொன்டு அடிக்கல்
நாட்டி வைத்தனர்
காணி உரிமைகள்பற்றிய பயிற்சிச் செயலமர்வு
மேற்படி செயலமர்வானது அம்பாறை மாவட்ட அரச சார்பற்ற அமைப்புக்களது இணையத்தின் ஒழுங்கமைப்பில் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் அனுசரைணயுடன் இம்மாதம் 15 மற்றும் 16 ஆந் திகதிகளில் அக்கரைப்பற்று சுவாட் மண்டபத்தில் இப்பயிற்சி மற்றும் அறிவூட்டல் கருத்தரங்கு இடம்பெற்றது. இதனை இணையத்தின் தவிசாளர் திரு: வ.பரமசிங்கம் அவர்கள் சம்பிரதாய பூர்வமாக ஆரம்பித்துவைத்து தலைமையுரையாற்றினார்.
அதனைத் தொடர்ந்து தற்காலத்தில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் எதிர்நோக்குகின்ற காணி உரிமைகள் பற்றிய பிரச்சினைகள் மற்றும் அரச காணிகளின் சுவீகரிப்பு மற்றும் அதனை தடுக்கும் வழிமுறைகள் அத்துடன் காணி தொடர்பிலான சட்ட ஏற்பாடுகள் அத்துடன் பிரச்சினைகள் தீர்க்கப்பட்ட மற்றும் கையாளப்பட்டவிதம் குறித்தும் தெளிவு படுத்தப்பட்டதோடு பங்குபற்றுனர்களின் கருத்துப்பறிமாறல்களும், கேள்விக்கணைகளும் முன்வைக்கப்பட்டதோடு அதற்கான ஆலோசனைகளும் பெற்றுக்கொள்ளப்பட்டது.
இச்செயலமர்வை ஊர்சுனு நிறுவனத்தின் வழக்கறிஞர்களோடு இணைந்து 02 ம் நாளில் ஓய்வு பெற்ற உதவிக்காணி ஆணையாளர் திரு: க.குருநாதன் அவர்கள் மிகவும் தெளிவான கருத்துரையுடன் திறன்பட வழிநடாத்திச் சென்றார்.
இந்நிகழ்வில் கலந்துகொண்ட பங்குபற்றுனர்களையும், இணையத்தின் தவிசாளர் தலைமையுரையாற்றுவதையும், வளவாளர்கள் செயலமர்வை வழிநடாத்துவதையும், பங்குபற்றுனர்கள் கருத்துப்பறிமாறல்கள் மேற்கொள்வதையும் படத்தில் காணலாம்.
Sunday, 14 July 2013
சிவில் பாதுகாப்பு குழு அங்கத்தவர்களுக்கான அடையாள அட்டை வழங்கும் நிகழ்வு-
ஆலையடிவேம்பு சிவில் பாதுகாப்பு குழு அங்கத்தவர்களுக்கான அடையாள அட்டை வழங்கும் நிகழ்வு-2013
Wednesday, 10 July 2013
கல்முனை கல்வி வலய பாடசாலைகளுக்கு இடையிலான வலய மட்ட ஆங்கில தின போட்டிகள்
தருவது....... உதயகாந்...
கல்முனை கல்வி வலய பாடசாலைகளுக்கு இடையிலான வலய மட்ட ஆங்கில தின போட்டிகள் வலய கல்வி அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டு நேற்றைய தினம் 09.07.2013 திகதி நிந்தவூர் அல்-மஷ்ஹர் பெண்கள் உயர்தர பாடசாலையில் நடைபெற்றது.
இப் போட்டி நிகழ்வில் கனிஷ்ட/சிரேஷ்ட்ட மாணவகளுக்கான பேச்சு போட்டிகளும் , நாடக போட்டிகளும் இடம்பெற்றன.
கனிஷ்ட மாணவர்களுக்கான நாடகப் போட்டியில் கோட்ட மட்டத்தில் முதலிடம் பெற்று இச் சுற்றில் பங்கு கொண்டு பல பாடசாலைகளுடன் போட்டியிட்டு கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலை மாணவர்கள் முதலிடத்தினை பெற்றுக்கொண்டனர்.
Wednesday, 3 July 2013
பொத்துவில் பகுதியில் மலசலகூட குழிக்குள் 5 பெரிய நாகப்பாம்புகள்
சில தினங்களுக்கு முன்னர் 6 அடி நீளமான ஒரு பெரிய நாகபாம்பு தவறுதலாக மலசலகூட குழியினுள் விழுந்துள்ளது. அதேவேளை, அதனைத் துரத்திவந்த 4 நாகபாம்புகளும் அதே குழியில் விழுந்துள்ளன.
குறித்த நாகபாம்புகள் வெளியே வரமுடியால் 4 தினங்களாக குழியினுள் தவித்துக்கொண்டிருந்தன. இதுகுறித்து பொலிஸாருக்கு தகவல் அறிவிக்கப்பட்ட பின்னர், நேற்று செவ்வாய்க்கிழமை குமண வனவிலங்கு பிரிவினர் அழைக்கப்பட்டு 5 நாகபாம்புகளையும் பிடித்துச் சென்றுள்ளனர்.
கிடைத்த தகவல்களின்படி முதலில் ஓடிவந்து விழுந்தது பெண் நாகபாம்பு என்றும், பின்னால் ஓடிவந்தது ஆண் நாகபாம்புகள் எனறும் அறியக்கிடைத்துள்ளது. பொதுமக்கள் பயத்துடனும், அச்சத்துடனும் குறித்து இடத்தில் குழுமியிருந்தனர்.
பொத்துவில், ஊறணி தாமரத்தான் என்பவரது வீட்டிலுள்ள பாழடைந்த மலசலகூட குழியினுள்ளேயே இந்த நாகபாம்புகள் இருந்துள்ளன.
குறித்த நாகபாம்புகள் வெளியே வரமுடியால் 4 தினங்களாக குழியினுள் தவித்துக்கொண்டிருந்தன. இதுகுறித்து பொலிஸாருக்கு தகவல் அறிவிக்கப்பட்ட பின்னர், நேற்று செவ்வாய்க்கிழமை குமண வனவிலங்கு பிரிவினர் அழைக்கப்பட்டு 5 நாகபாம்புகளையும் பிடித்துச் சென்றுள்ளனர்.
கிடைத்த தகவல்களின்படி முதலில் ஓடிவந்து விழுந்தது பெண் நாகபாம்பு என்றும், பின்னால் ஓடிவந்தது ஆண் நாகபாம்புகள் எனறும் அறியக்கிடைத்துள்ளது. பொதுமக்கள் பயத்துடனும், அச்சத்துடனும் குறித்து இடத்தில் குழுமியிருந்தனர்.
பொத்துவில், ஊறணி தாமரத்தான் என்பவரது வீட்டிலுள்ள பாழடைந்த மலசலகூட குழியினுள்ளேயே இந்த நாகபாம்புகள் இருந்துள்ளன.
திருக்கோவில் பிரதேசத்தில் சட்டவிரோத துப்பாக்கி தயாரிக்கும் இடம்
இதன்போது குறித்த இடத்தில் இருந்து சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அத்துடன், தயாரிக்கப்பட்டுவந்த 3 துப்பாக்கிகள், மூன்று ரவைகள், 10கிராம் வெடி மருந்து மற்றும் 10 ஈயத்தகடு என்பவற்றை பொலிஸார் குறித்த இடத்தில் இருந்து மீட்டுள்ளனர்.
சந்தேகநபர் இன்று பொத்துவில் நீதவான் முன்னிலையில் ஆஜர் செய்யப்படவுள்ளார். திருக்கோவில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
Subscribe to:
Posts (Atom)