Wednesday, 3 July 2013

திருக்கோவில் பிரதேசத்தில் சட்டவிரோத துப்பாக்கி தயாரிக்கும் இடம்

திருக்கோவில்  பிரதேசத்தில் இயங்கிவந்த சட்டவிரோத துப்பாக்கி தயாரிக்கும் இடமொன்றை பொலிஸார் சுற்றிவளைத்துள்ளனர். திருக்கோவில் பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது குறித்த இடத்தில் இருந்து சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அத்துடன், தயாரிக்கப்பட்டுவந்த 3 துப்பாக்கிகள், மூன்று ரவைகள், 10கிராம் வெடி மருந்து மற்றும் 10 ஈயத்தகடு என்பவற்றை பொலிஸார் குறித்த இடத்தில் இருந்து மீட்டுள்ளனர். 

சந்தேகநபர் இன்று பொத்துவில் நீதவான் முன்னிலையில் ஆஜர் செய்யப்படவுள்ளார். திருக்கோவில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் 

No comments: