Wednesday, 3 July 2013

பொத்துவில் பகுதியில் மலசலகூட குழிக்குள் 5 பெரிய நாகப்பாம்புகள்

சில தினங்களுக்கு முன்னர் 6 அடி நீளமான ஒரு பெரிய நாகபாம்பு தவறுதலாக மலசலகூட குழியினுள் விழுந்துள்ளது. அதேவேளை, அதனைத் துரத்திவந்த 4 நாகபாம்புகளும் அதே குழியில் விழுந்துள்ளன.

குறித்த நாகபாம்புகள் வெளியே வரமுடியால் 4 தினங்களாக குழியினுள் தவித்துக்கொண்டிருந்தன. இதுகுறித்து பொலிஸாருக்கு தகவல் அறிவிக்கப்பட்ட பின்னர், நேற்று செவ்வாய்க்கிழமை குமண வனவிலங்கு பிரிவினர் அழைக்கப்பட்டு 5 நாகபாம்புகளையும் பிடித்துச் சென்றுள்ளனர்.

கிடைத்த தகவல்களின்படி முதலில் ஓடிவந்து விழுந்தது பெண் நாகபாம்பு என்றும், பின்னால் ஓடிவந்தது ஆண் நாகபாம்புகள் எனறும் அறியக்கிடைத்துள்ளது. பொதுமக்கள் பயத்துடனும், அச்சத்துடனும் குறித்து இடத்தில் குழுமியிருந்தனர்.

பொத்துவில், ஊறணி தாமரத்தான் என்பவரது வீட்டிலுள்ள பாழடைந்த மலசலகூட குழியினுள்ளேயே இந்த நாகபாம்புகள் இருந்துள்ளன.

No comments: