Friday, 19 July 2013

காணி உரிமைகள்பற்றிய பயிற்சிச் செயலமர்வு

காணி உரிமைகள் அவற்றை கையாளுகை பற்றிய பயிற்சிச் செயலமர்வு 







 

மேற்படி செயலமர்வானது அம்பாறை மாவட்ட அரச சார்பற்ற அமைப்புக்களது இணையத்தின் ஒழுங்கமைப்பில் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் அனுசரைணயுடன் இம்மாதம் 15 மற்றும் 16 ஆந் திகதிகளில் அக்கரைப்பற்று சுவாட் மண்டபத்தில் இப்பயிற்சி மற்றும் அறிவூட்டல் கருத்தரங்கு இடம்பெற்றது. இதனை இணையத்தின் தவிசாளர் திரு: வ.பரமசிங்கம் அவர்கள் சம்பிரதாய பூர்வமாக ஆரம்பித்துவைத்து தலைமையுரையாற்றினார்.
அதனைத் தொடர்ந்து தற்காலத்தில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் எதிர்நோக்குகின்ற காணி உரிமைகள் பற்றிய பிரச்சினைகள் மற்றும் அரச காணிகளின் சுவீகரிப்பு மற்றும் அதனை தடுக்கும் வழிமுறைகள் அத்துடன் காணி தொடர்பிலான சட்ட ஏற்பாடுகள் அத்துடன் பிரச்சினைகள் தீர்க்கப்பட்ட மற்றும் கையாளப்பட்டவிதம் குறித்தும் தெளிவு படுத்தப்பட்டதோடு பங்குபற்றுனர்களின் கருத்துப்பறிமாறல்களும், கேள்விக்கணைகளும் முன்வைக்கப்பட்டதோடு அதற்கான ஆலோசனைகளும் பெற்றுக்கொள்ளப்பட்டது. 
இச்செயலமர்வை ஊர்சுனு நிறுவனத்தின் வழக்கறிஞர்களோடு இணைந்து 02 ம் நாளில் ஓய்வு பெற்ற உதவிக்காணி ஆணையாளர் திரு: க.குருநாதன் அவர்கள் மிகவும் தெளிவான கருத்துரையுடன் திறன்பட வழிநடாத்திச் சென்றார்.
இந்நிகழ்வில் கலந்துகொண்ட பங்குபற்றுனர்களையும், இணையத்தின் தவிசாளர் தலைமையுரையாற்றுவதையும், வளவாளர்கள் செயலமர்வை வழிநடாத்துவதையும், பங்குபற்றுனர்கள் கருத்துப்பறிமாறல்கள் மேற்கொள்வதையும் படத்தில் காணலாம்.

No comments: