பெண்களை தலைவர்களாக கொண்ட அதிகளவான சமுர்த்தி வங்கிகளும் சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்புக்களும் இணைந்து மகளிர் தின கொண்டாட்டங்களை இம்முறை சிறப்பாக கொண்டாடி வருகின்றது.
இதற்கமைவாக ஆலையடிவேம்பு தெற்கு வங்கியும் சமுதாய அடிப்படை அமைப்புக்களும் இணைந்து இன்று தலைமைத்துவம் தாங்கும் பெண்களை கௌரவிக்கும் நிகழ்வொன்றை ஏற்பாடு செய்தது.
ஆலையடிவேம்பு தெற்கு வங்கியின் முகாமையாளர் கே.அசோக்குமார் மற்றும் வங்கியின் கட்டுப்பாட்டுச்சபைத்தலைவி கே.கிருஸ்ணகுமாரி இணைத்தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் பனங்காடு பாசுபதேசுவரர் ஆலயத்தின் பிரதமகுரு சிவஸ்ரீ பி.புண்யகிருஸ்ணகுமாரக்குருக்கள் மற்றும் ஓய்வு பெற்ற சமுர்த்தி வங்கிச்சங்க முகாமைத்துவ பணிப்பாளர் அருந்ததி மகேஸ்வரன் தற்போதைய முகாமைத்துவ பணிப்பாளர் சிவப்பிரியா சுதாகரன் சமுர்த்தி வங்கிச்சங்க உதவி முகாமையாளர் வி.சுகிர்தமார் வலய உதவி முகாமையாளர் கே.பி.ராஜசிறி வங்கி உதவி முகாமையாளர் ஏ.நல்லதம்பி உள்ளிட்ட சமுர்த்தி உத்தியோகத்தர்கள் சங்க தலைவிகள் என பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் ஆசி உரை வழங்கப்பட்டதுடன் தலைமை மற்றும் அதிதிகள் உரை இடம்பெற்றன.
சிறப்பு நிகழ்வாக 25 வருடங்கள் சேவையாற்றி ஓய்வு பெற்றுச் சென்ற முகாமைத்துவ பணிப்பாளர் அருந்ததி மகேஸ்வரன் கட்டுப்பாட்டுச்சபைத்தலைவி உள்ளிட்ட நிருவாகத்தினரால் பொன்னாடை போர்த்தி நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
இதேநேரம் 23 வருடங்களாக கடமையாற்றும் பெண் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர்.
இதேநேரம் புதிய கடன் வழங்கும் திட்டங்களும் ஆரம்பித்து வைக்கப்பட்டன.
No comments:
Post a Comment