Saturday, 26 September 2020

பலத்த காற்றினால் 03கடைகள் சேதம்,


தில்லை வாணி 0777039996   

பலத்த காற்றினால் 03கடைகள் சேதம், போக்குவரத்து மின்சாரம் துண்டிப்பு 

அம்பாறையில் பல பகுதிகளில் பெய்துவரும் காற்றுடனான மழையினை தொடர்ந்து கோமாரி-1 , பி- 23 கழுகொள்ள என்னும் இடத்தில் இன்று (26)மாலை.வீதியின் நடுவே சரிந்து விழுந்த மரத்தால் மூன்று கடைகள் சேதமாகின 

சிறுவன் உயிரிழந்துள்ளான்.

haran
மட்டக்களப்பு தேத்தாத்தீவு பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 13 வயதுடைய சிறுவன் உயிரிழந்துள்ளான்.

ஊடக வியலாளர்கள் பயிற்றுவிப்பு

haran
ஊடக வியலாளர்கள் பயிற்றுவிப்பு 



இளம் சமாதான ஊடகவியலாளர்களுக்கான MediaCorps 
புலமமப்பரிசில்யற்திட்டம்.
இலங்கை அபிவிருத்திக்கான ஊடைவியலாளர் மன்றத்தினால் ஏற்பாடு
செய்யப்பட்ட பயிற்சி கடந்த  11 ஆம் திகதி முதல் கட்டுநாயக்க ரமதா
விடுதியில்  இடம்பெற்றுறது . 











நாட்டின் பல பாகங்களில் இருந்து தெரிவுசெய்யப்பட்ட அனைத்து மாவட்டங்களையும் 
 பிரதிநிதித்துவப்படுத்துகின் ற மூன்று இனத்தினையும் பிரதிநிதித்துவப்படுத்தும் 
இளம் ஊடைவியலாளர்ள் 25 பேர் குழுவில் உள்ளடங்குகின் றனர்.


MediaCorps புலகமப்பரிசில் செயற்திட்டத்தின் ஐந்தாவது
குழுவினது 
இந்த பயிற்சி நெறி இடம் பெற்றது 

 இவ் நிகழ்வில் முரண்பாட்டு கூர் உணர்வு மற்றும் ஊடகவியலாளர்களுக்கான ஊடக பயன்பாடுகள் பன்மைத்துவ விடயத்தில் கூருணர்வு   கையடக்கத்தொலைபேசி ஊடகவியல் போன்ற பயிற்சிகள் இடம்பெற்றதுடன் ஊடக பொருட்களும் கையளிக்கப்பட்டன

. இவ்வாறு தெரிவு செய்யப்பட்ட 
 குறித்த ஊடகவியலாளர் கள்   இந்த ஐந்து நாள் பயிற்சிக்கு  முன்னர்
ஒன்லைன் (Online) மூலம்  இணைய வழி  அமர்வுகள் (Webinar) நான்கு நாட்கள் இடம் பெற்றது குறிப்பிடத்தக்கது 

விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு

haran
வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு  




கல்குடா பொலிஸ் பிரிவிலுள்ள கும்புறுமூலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு மற்றொருவர் படுகாயமுற்றநிலையில் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

துப்பாக்கி மீட்கப்பட்டுள்ளது.

haran

அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புளோக் ஜே கிழக்கு -3 பகுதியில் நிலத்தில் மறைத்து வைக்கப்பட்ட நிலையில் துப்பாக்கி மீட்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்து தயாரிப்பு சொட்கண் ரக துப்பாக்கியொன்று மைதானம் ஒன்றில் புதைத்து வைக்கப்பட்டுள்ளதாக சம்மாந்துறை விஷேட அதிரடி படையினருக்கு கிடைத்த தகவலையடுத்து குறித்த துப்பாக்கி இன்று (22) காலை சம்மாந்துறை விசேட அதிரடிப்படை முகாம் பொறுப்பதிகாரி ரத்னமல தலைமையிலான விசேட அதிரடிப்படையினர் குறித்த பகுதியைச் சுற்றி வளைத்து தேடுதல் நடத்தி இத்துப்பாக்கியை மீட்டுள்ளனர். குறித்த இங்கிலாந்து தயாரிப்பு துப்பாக்கியுடன் 6 ரவைகளும் கத்தி ஒன்றும் மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தற்போது மீட்கப்பட்ட துப்பாக்கி சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

வர்த்தக நிலையம் முற்றுகை

வர்த்தக நிலையம் முற்றுகை விசேட சோதனையில் சிக்கியது பொருட்கள் 

சர்வதேச சைகை மொழி

news by........  றியானா......
சர்வதேச சைகை மொழி 2020 வாரத்தினை முன்னிட்டு யாழ்பானம்  வடமராட்சி செவிப்புல வலுவிழந்தோர் நிறுவனத்தினரால்

பொலிஸாரின் திடீர் சோதனை

அம்பாறை பிராந்தியத்தில் கொரோனா அனர்த்தங்களால் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட மாவட்ட விசேட போக்குவரத்து பொலிஸாரின் திடீர் சோதனை நடவடிக்கை ஆரம்பமாகியுள்ளது.




வியாழக்கிழமை(24)  இந்த திடீர் சோதனை நடவடிக்கையானது சம்மாந்துறை புறநகரப்பகுதி, கல்முனை நகரப்பகுதி, நற்பிட்டிமுனை பிரதான சந்தி ,தாளவட்டுவான் சந்தி, பாண்டிருப்பு, சவளக்கடை போன்ற இடங்களில் மேற்கொள்ளப்பட்டது.

இத் திடீர் சோதனையில் சாரதி அனுமதிப்பத்திரமின்றி வாகனம் செலுத்துவது, தலைக்கவசம் அணியாது செல்வது, ஒரு மோட்டார் சைக்கிளில் இருவருக்கு மேற்பட்டவர்கள் பயணிப்பது, அதிவேகமாக செல்வது ,தொடர்பில் கண்காணிக்கப்பட்டு தண்டப்பணம் விதிக்கப்பட்டு வீதி ஒழுங்குமுறை தொடர்பான ஆலோசனைகள் பொலிஸாரினால் வழங்கப்பட்டன.

இச்சோதனை நடவடிக்கையானது அம்பாரை மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் வழிகாட்டலில் இடம்பெற்றதுடன் இதன் போது அம்பாறை மாவட்ட விசேட போக்குவரத்து பொலிஸாருடன் இணைந்து கல்முனை,  சம்மாந்துறை, சவளைக்கடை பொலிஸ் நிலைய போக்குவரத்து பொலிஸாரும் இணைந்து முக்கிய சந்திகள்,  பிரதான வீதிகளில் திடீர் சோதனை நடவடிக்கையினை மேற்கொண்டனர்


haran

Wednesday, 23 September 2020

பட்டிருப்பு ம.ம.வி, தேசிய பாடசாலை – களுவாஞ்சிகுடியின் அதிபராக முருகமூர்த்தி சபேஸ்குமார்!!!

Niloch


பட்டிருப்பு ம.ம.வி, தேசிய பாடசாலை – களுவாஞ்சிகுடியின் அதிபராக முருகமூர்த்தி சபேஸ்குமார் இன்று (23.09.2020) கடமையைப் பொறுப்பேற்றுக் கொண்டார். தம்பிலுவில்லைச் சேர்ந்த விஞ்ஞானப் பட்டதாரியான இவர் இலங்கை கல்வி நிர்வாக சேவைப் பரீட்சையில் தமிழ் மொழி மூலத்தில் முதல் நிலையைப் பெற்றுக் கொண்டவர் என்பதோடு அக்கரைப்பற்று வலயக்கல்வி அலுவலகத்தில் உதவிக் கல்விப் பணிப்பாளராக கடமையாற்றியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பட்டிருப்பு வலயக்கல்வி அலுவலகத்தின் பிரதிக் கல்விப் பணிப்பாளர் எஸ்.மகேந்திரகுமார் மற்றும் உதவிக்கல்விப் பணிப்பாளர் எஸ்.தயாளசீலன் ஆகியோர் முன்னிலையில் கடமையைப் பொறுப்பேற்றுக் கொண்ட புதிய அதிபரை பிரதி அதிபர்கள், ஆசிரியர்கள், கல்விசாரா உத்தியோகத்தர்கள், பாடசாலை அபிவிருத்திக் குழுவினர் மற்றும் பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள்; வரவேற்று வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டனர்.

Sunday, 6 September 2020

தீப்பற்றிய எம்.டி நியூ டயமன்ட் கப்பல் தொடர்பில் ஆய்வு

                       
ம்பாறை சங்கமன்கண்டி கடற்பரப்பில் தீப்பற்றிய எம்.டி நியூ டயமன்ட் கப்பல் தொடர்பில் ஆய்வு செய்வதற்காக பிரித்தானியா மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளை சேர்ந்த விசேட நிபுணர்கள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.


Tuesday, 1 September 2020

ராகு - கேது பெயர்ச்சி பலன்கள்

ராகு - கேது பெயர்ச்சி பலன்கள்
1.9.2020 முதல் 21.3.2022 வரை





1-மேஷம்
ராகுவின் பலன்கள்: இதுவரை ராசிக்கு 3-ம் வீட்டில் இருந்துகொண்டு வாழ்வில் புதிய திருப்பங்களையும் மன தைரியத்தையும் கொடுத்துவந்த ராகு பகவான் இப்போது உங்கள் ராசிக்கு 2-ம் வீட்டில் வந்து அமர்கிறார். வருமானம் ஒருபக்கம் இருந்தாலும் மறுபக்கம் அதற்கேற்ப செலவுகளும் இருக்கும். தடைபட்டு பாதியிலேயே நின்றுபோன காரியங்கள் இப்போது கைகூடும். கணவன் மனைவிக்குள் விட்டுக்கொடுப்பது நல்லது.
கேதுவின் பலன்கள்: இதுவரை உங்கள் ராசிக்கு 9-ம் வீட்டில் அமர்ந்துகொண்டு வீண் செலவுகளைத் தந்த கேது பகவான் இப்போது 8-ல் அமர்வதால் வெளிவட்டாரத்தில் நிதானத்தையும் பொறுமையையும் கடைப்பிடிப்பது அவசியம். மற்றவர்களிடம் பேசும்போது வார்த்தைகளில் கவனம் வேண்டும். 8-ல் நிற்கும் கேது ஆன்மிகச் சிந்தனை, பொது அறிவு, யோகா, தியானம் இவற்றில் ஈடுபாட்டை ஏற்படுத்துவார்.
வியாபாரத்தில் முன்புபோல் நஷ்டம் வராமல் இருக்க, புது வகையில் யோசிப்பீர்கள். லாபம் உயரும். வேலையாட்களிடம் இருந்த மனஸ்தாபங்கள் விலகும். உத்தியோகத்தில் இருந்துவந்த மோதல் போக்கு மறையும். மேலதிகாரி உங்களின் பொறுப்புணர்வைக்கண்டு உயர்பதவிக்கு சிபாரிசு செய்வார்.
அசுர வளர்ச்சியையும் பணவரவையும் வெற்றியையும் தருவதாக அமையும் இந்த ராகு - கேது மாற்றம்.