அம்பாறை - பொத்துவில் பிரதேச சபையின் செயலாளர் தங்கராசா சாயிதாசன், நேற்று (29) நள்ளிரவு இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்துள்ளாரென, பொலிஸார் தெரிவித்தனர்.
அக்கரைப்பற்று பிரதேசத்தில் இருந்து திருக்கோவில் பிரதேசத்தை நோக்கி, மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த போது, தம்பிலுவில் அம்மன் கோவிலுக்கு அருகாமையில் இடம்பெற்ற விபத்திலேயே, இவர் உயிரிழந்துள்ளார்.
சடலம், திருக்கோவில் ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
சிவன் கோவில் வீதி, பனங்காட்டைச் சேர்ந்த 34 வயதுடைய குறித்த இளைஞன், கடந்த வருடம் நடைபெற்ற நிர்வாக சேவையின் அதியுயர் தரத்துக்கான பரீட்சையில் சித்தியடைந்து பொத்துவில் பிரதேச சபையின் செயலாளராக அண்மையில் நியமிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
விபத்து தொடர்பான விசாரணைகளை, திருக்கோவில் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்
No comments:
Post a Comment