Tuesday, 9 July 2019

வயலுக்குள் பாய்ந்த பஸ் ; மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்



பொத்துவில் பொலிஸ்ப் பிரிவுக்குட்பட்ட றொட்டை வயல் பிரதேசத்தில் பொத்துவில் டிப்போக்கு சொந்தமான இ.போ.ச பஸ் ஒன்று வீதியை விட்டு விலகி வயல் பிரதேசத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.


குறித்த பஸ் கதிர்காமத்திலிருந்து பயணிகளை ஏற்றுக் கொண்டு நேற்று திங்கட்கிழமை (08) இரவு அக்கரைப்பற்று நகருக்குச் சென்று பயணிகளை இறக்கிவிட்டு மீண்டும் இன்று செவ்வாய்க்கிழமை (09) அதிகாலை 5.30 மணியளவில் பொத்துவில் நகரை நோக்கிப் பயணித்துக் கொண்டு இருந்த வேளை வீதியை விட்டு விலகி வயலுக்குள் பாய்ந்து விபத்து ஏற்பட்டு உள்ளதாகச் சம்பவத்தைப் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.

இவ்விபத்து இடம்பெற்ற வேளை சில பயணிகள் இருந்துள்ளதுடன் சாரதிக்குக் காலில் காயம் ஏற்றுப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் சாரதியின் பக்கம் பஸ் சேதடைந்துள்ளதையும் அவதானிக்கக் கூடியதாக இருந்தன.

இந்நிலையில் குறித்த  விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொத்துவில் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.


வயலுக்குள் பாய்ந்த பஸ் ; மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள் Rating: 4.5 Diposkan Oleh: Sayan

No comments: