எதிர் வரும் பாராளுமன்ற பொதுத்தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் ஆலையடிவேம்பு பிரதேசத்தினை பிரதினிதித்துவப்படுத்தும் வேட்பாளரை தெரிவு செய்யும் நிகழ்வு கூட்டமைப்பின் பொத்துவீல் தொகுதி செயலாளர் ம.காளிதாசன் தலைமையில் இன்று ஞாயிற்றுக்கிழமை (15) ஆலையடிவேம்பு கலாச்சாரமண்டபத்தில் இடம் பெற்றது
இதில் இப் பிரதேச அனைத்து இந்து ஆலயம்களின் அறங்காவல் சபை உறுப்பினர்கள் மாதர் சங்கம்கள் விளையாட்டுக் கழகங்கள் வர்த்தக சங்க உறுப்பினர்கள் இளைஞர் கழகம்கள் கட்சியின் ஆதரவாளர்கள் தொண்டர்கள் பொதுமக்கள் என பிரதேசத்தின் அனைத்து தரப்பினரும் கலந்து கொண்டு பொது வேட்பாளரினை தெரிவு செய்தனர்
அந்த வகையில் ஆலையடிவேம்பு பிரதேசத்தினை பிரதினிதித்துவப்படுத்தும் முகவாகவும் தலைமை வேற்பாளராகவும் க.கோடிஸ்வரன் செய்யப்பட்டுள்ளார் இவ் நிகழ்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆலையடிவேம்பு பிரதேச சபை தவிசாளர் க.இரத்தினவேல் உப தவிசாளர் சியாம்சுந்தர் கூட்டமைப்பின் பொத்துவீல் தொகுதி செயலாளர் ம.காளிதாசன் போன்றோர் கலந்து கொண்டிருந்தனர்.
No comments:
Post a Comment