Wednesday, 18 February 2015

கடத்தப்பட்டு காணமல் போய் உள்ள உறவுகளை மீட்டுத்தருமாறு கோரி ஆர்ப்பாட்டம்

 காணமல் போன உறவுகளை மீட்டுத்தருமாறு இனிய பாரதிக்கு எதிராக ஆர்ப்பாட்டம்
 

 கடந்தகால யுத்தத்தின் போது அம்பாறை மாவட்டத்தில் கடத்தப்பட்டு காணமல் போய் உள்ள உறவுகளை மீட்டுத்தருமாறு கோரியும்   இவர்களை முன்னாள் ஜனாதிபதியின் அம்பாரை மாவட்ட இணைப்பாளரும்  கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான பு.புஸ்குமார் (இனிய பாரதி)யினால் கடத்திச் செல்லப்பட்டு காணமல் போயுள்ளதாக காணாமல் போனோரின் உறவுகள் இனிய பாரதிக்கு எதிராக திருக்கோவில் தம்மிலுவில் பொதுச்சந்தை கட்டிடத்துக்கு முன்னால் இன்று புதன் கிழமை(18) பாரிய ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்




      
இதில் திருக்கோவில் தம்பிலுவில்  ஆலையடிவேம்பு கண்ணகிபுரம் பனங்காடு வினாயகபுரம்  போன்ற பிரதேசங்களில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் சிறுவர்கள் கலந்து கொண்டு பாரதியே நீ கடத்திச் சென்ற என் மகன் என்கே? சீலன் பிடித்துச் சென்ற  பிள்ளைகள் எங்கே? அடக்கு முறையால் அழித்து விட்டீரே எம் மக்களை அரசே? அடைத்து விடு பாரதியை சிறையில். இவ்வாறு பல்வேறு சுலோகங்கள் தாங்கிய வண்ணம் காணாமல் போன உறவுகள் கண்ணீர் மல்க அழுது புலம்பியதுடன் இனிய பாரதியின் முன்னாள் காரியாலயமாக அமைந்திருந்த  தம்பிலுவில் குருகுல வீதியில் உள்ள வீட்டுப் பகுதியில் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டிருப்பதாகவும் நிலம்,மலசல கூட குளிகளைத் தோண்டி ஆராயுமாறும் எலும் பூக்கூடுகளையாவது மீட்டுத்தருமாறும் அதுவரைக்கும் அவ் வீட்டுப்பகுதிக்கு
 பொலிஸ்பாதுகாப்பு வழங்கி சேதனையிடுமாறு  கோரிக்கை அடங்கிய மகயர் ஒண்றினையும் உதவி பொலிஸ் உத்தியோகத்தரிடம் த.தே.கூ. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ச.சந்திரகாந்தன் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கலையரசன் இணைந்து டி.கே.ஹேமந்த விக்கோவிட்டவிடம் கையளித்தனர் 

No comments: