Thursday, 23 May 2013

சொன்ட் அமைப்பினால் நடாத்தப்பட்ட இளையோர் பரிமாற்றல் நிகழ்ச்சி.


சொன்ட் அமைப்பினால்  நடாத்தப்பட்ட இளையோர் பரிமாற்றல்  நிகழ்ச்சி.




மொழிகள் உரிமைகள் திட்டத்தின் கீழ் யாழ்ப்பாணம், கிளிநொச்சி,முல்லைத்தீவு,அம்பாறை மூவின நான்கு மதத்தினையும் சேர்ந்த இளையோர் ஒன்று சேர்ந்து இளையோர் பரிமாற்றல்  நிகழ்வு .
நிறைவேற்று பணிப்பாளர் ச.செந்துராசா

சிப்தெர புலமைபரிசில் வழங்கும் நிகழ்வு


ஆலையடிவேம்பு பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட தெரிவுசெய்யப்பட் மாணவர்களுக்கான சிப்தெர புலமைபரிசில் வழங்கும் நிகழ்வு அக்-இராமகிருஷ்ன தேசிய பாடசாலையில் பிரதேசசெயலாளர் வீ.ஜெகதீசன் அவர்களின் தலமையில்  பாராளுமன்ற உறுப்பினர் பி.எச்.பியசேன அதிபர் கிருபைராயா அவரது ஏற்பாட்டில் இடம்பெற்றது நிகழ்வில் கோட்டக்கல்வி அதிகாரி திரு குணாளன் சமுர்த்தி உத்தியோகத்தர் நேசராசா உப அதிபர் டேவிட் மற்றும் லோகநாதன் பிரதேசசெயலாளரின் ஊடகபொறுப்பாளர் உதயகாந் போன்றோர் கலந்துசிறப்பித்தனர்



பட உதவி ஊடகபொறுப்பாளர் உதயகாந்

Wednesday, 22 May 2013

கன்னகிஅம்மன் ஆலயம் திருக்கதவு திறக்கப்பட்டு திருக்குளிர்ச்சி விழாக்கோலம்


கிழக்கில் காணப்படுகின்ற கன்னகிஅம்மன் ஆலயம் திருக்கதவு திறக்கப்பட்டு திருக்குளிர்ச்சி விழாக்கோலம் பூண்டுள்ளன பட்டிநகர் கண்ணகிஅம்மன் ஆலயம் மருதையடி கன்னகிஅம்மன் ஆலயம் தம்பிலுவில் கன்னகிஅம்மன் ஆலயம் கோளாவில் கன்னகிஅம்மன் ஆலயம் போன்ற அனைத்து அம்மன் ஆலயங்களிலும் ஆலயம் திருக்கதவு திறக்கப்பட்டு திருக்குளிர்ச்சி விழாக்கோலம் பூண்டுள்ளன

Saturday, 4 May 2013

இளைஞர் பாராளுமன்ற தேர்தல்

பிரதேச செயலக ரீதியாக நடாத்தப்படும் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் தெரிவுக்கான தேர்தல்  ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திலும் பிரதேச செயலாளர் திரு . வே.ஜெகதீசன் அவர்களின் மேற்பார்வையின் கீழ்    வாக்குசாவடியின் பொறுப்பதிகாரியும் இளைஞர் சேவைகள் உத்தியோகத்தருமான திரு .கு.பிரபாகரன் அவர்களும் இணைந்து மாவட்ட காரியாலையத்தினால் நியமிக்கப்பட்ட  இளைஞர் சேவைகள் உத்தியோகத்தரான M.I.M.பரீட் அவர்களும்
இவ் வாக்கெடுப்பு நிகழ்வில் கலந்துகொண்டார்கள் 25 இளைஞர் கழகங்களின்  816 உறுப்பினர்கள் வாக்களிப்பதற்கு தகுதிடையவர்கள்.