Saturday, 28 December 2013

ஆஞ்ஞநேயர் ஜெயந்தி தினம் 01.01.2014

அக்கரைப்பற்று வாச்சுக்குடா ஆஞ்ஞநேயர் ஆலயத்தில் ஜெயந்தி தினத்தை முன்னிட்டு 2014.01-01 இடம்பெறும் இலச்சாட்சனை கிரியைகளையும்  கலந்து கொண்ட பக்தர்களையும் காணலாம்

Displaying SN850177.jpg

Displaying SN850174.jpg

Displaying SN850254.jpg

Displaying SN850250.jpg




Thursday, 26 December 2013

அக்கரைப்பற்று பிரதான தபாலக ஊழியர்கள் தபால் அதிபரினை இடம்மாற்றக்கோரி அலுவலகத்திற்கு முன்னால் பணிபகிஷ்கரிப்பில் 27.12.2013.

அக்கரைப்பற்று பிரதான தபாலக ஊழியர்கள் தபால் அதிபரினை இடம்மாற்றக்கோரி அலுவலகத்திற்கு முன்னால் பணிபகிஷ்கரிப்பில் 27.12.2013. ,இடுபட்டிருப்பதையும் தபாலக கருமபீடம் வெறிச்சோடிக்காணப்படுவதையும் படத்தில் காணலாம்


Displaying SN850195.jpg 

Displaying SN850206.jpg



Displaying SN850217.jpg  

ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தால் வழங்கப்பட்ட வாழ்வாதார உதவிகள்”



மஹிந்த சிந்தனை வேலைத்திட்டத்தின் கீழ் வாழ்வாதார உதவிகள் தேவையுடையோராக அடையாளங்காணப்பட்ட வலுவிழந்தோருக்கான கொடுப்பனவுகள் இன்று 26-12-2013, வியாழக்கிழமை பிரதேச செயலக சமுகசேவைகள் பிரிவால் வழங்கிவைக்கப்பட்டன.

Photo  Photo


பிரதேச செயலாளர் வேதநாயகம் ஜெகதீசன் தலைமையில் நடந்த இந்நிகழ்வில் வாச்சிகுடாவைச் சேர்ந்த எஸ்.சரோஜாதேவி, ரி.கமலநாதன், கோளாவில் – 2 கே.வேல்முருகு ஆகியோர் வலுவிழந்தோருக்கான உதவிக்கொடுப்பனவுகளைப் பெற்றுக்கொண்டனர். இதன்போது அக்கரைப்பற்று பெண்கள் அபிவிருத்தி அரங்கத்தின் (WDF) அனுசரணையில் வாழ்வாதார உதவித்திட்டத்தின்கீழ் தையல் இயந்திரக் கொள்வனவிற்கான கொடுப்பனவினை கண்ணகிகிராமம் – 2 இனைச் சேர்ந்த ஜே.ஜெயப்பிரியா பெற்றுக்கொண்டார்.

இந்நிகழ்வுகளின்போது பிரதேச செயலாளருடன் சமுகசேவைகள் பிரிவு உத்தியோகத்தர்கள், மற்றும் பெண்கள் அபிவிருத்தி அரங்கத்தின் திட்ட உத்தியோகத்தர் ஆர்.பிரபாகரன் ஆகியோரும் உடனிருந்தனர்


முன்பள்ளி சிறார்களின் சுற்றுலா நிகழ்வு"

"ஆலையடிவேம்பு முன்பள்ளி சிறார்களின் சுற்றுலா நிகழ்வு"

Photo Photo












ஆலையடிவேம்பு பிரதேசப் பாலர் பாடசாலைகளில் கல்விபயிலும் முன்பள்ளி சிறார்கள் கலந்துகொண்ட சுற்றுலா நிகழ்வொன்று 24-12-2013, செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது. முன்பள்ளி அபிவிருத்தி வாரத்தினை முன்னிட்டு சிறுவர் அபிவிருத்தி மற்றும் பெண்கள் விவகார அமைச்சின் அனுசரணையுடன் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இச்சுற்றுலாவில் சுமார் 30 மாணவர்களும் 4 ஆசிரியைகளும் பிரதேச செயலகத்திலிருந்து முன்பிள்ளைப்பராய அபிவிருத்தி உத்தியோகத்தர் வை.உஜெயந்தன், உளவளத்துணை உதவியாளர் ஏ.எம்.சப்றினா ஆகியோரும் கலந்துகொண்டனர்.

கிழக்கில் பிரசித்திபெற்ற ஒலுவில் மீன்பிடித் துறைமுகம், பாலமுனை சிறுவர் பூங்கா மற்றும் இயற்கை எழில்கொஞ்சும் பாலமுனை கடற்கரைப் பிரதேசம் என்பனவற்றைப் பார்வையிட்ட இவர்கள் அதன்பின்னர் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்கு வருகைதந்து பிரதேச செயலாளர், உதவித் திட்டமிடல் பணிப்பாளர் ஆகியோரைச் சந்தித்து தமது பயண அனுபங்களைப் பகிர்ந்துகொண்டனர். இதன்போது பிரதேச செயலாளரால் அவர்களுக்குச் சிற்றுண்டி உபசாரம் வழங்கப்பட்டது.

கர்ப்பிணித் தாய்மாருக்கான கருத்தரங்கு"

ஆலையடிவேம்பில் நடைபெற்ற கர்ப்பிணித் தாய்மாருக்கான கருத்தரங்கு"

முன்பள்ளி அபிவிருத்தி வாரத்தினை முன்னிட்டு சிறுவர் அபிவிருத்தி மற்றும் பெண்கள் விவகார அமைச்சின் அனுசரணையுடன் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட கர்ப்பிணித் தாய்மாருக்கான போஷாக்குணவு மற்றும் விழிப்புணர்வு கருத்தரங்கு கடந்த 23-12-2013, திங்கட்கிழமை ஆலையடிவேம்பு சுகாதார வைத்திய அதிகாரியின் பணிமனையில் நடைபெற்றது.

Photo Photo


இக்கருத்தரங்கிற்கு வளவாளராக ஓய்வுபெற்ற மாவட்ட வைத்திய அதிகாரி திருமதி.சித்திரா தேவராஜன் கலந்துகொண்டு கர்ப்பிணித் தாய்மார் கைக்கொள்ளவேண்டிய போஷாக்குமிக்க உணவுவகைகள், சுகாதாரப் பழக்கவழக்கங்கள், கர்ப்பகால வியாதிகளிலிருந்து பதுகாப்புப்பெறல் தொடர்பான பல்வேறுபட்ட கருத்துக்களையும் ஆலோசனைகளையும் வழங்கினார்.

இதில் 52 கர்ப்பிணித் தாய்மார்கள், ஆலையடிவேம்பு சுகாதார வைத்திய அதிகாரியின் காரியாலயத்தில் பணியாற்றும் 10 பொதுச்சுகாதார மருத்துவமாதுகள் மற்றும் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திலிருந்து உதவித் திட்டமிடல் பணிப்பாளர் திருமதி.திலகராணி கிருபைராஜா, முன்பிள்ளைப்பராய அபிவிருத்தி உத்தியோகத்தர் வை.உஜெயந்தன், உளவளத்துணை உதவியாளர் ஏ.எம்.சப்றினா ஆகியோர் கலந்துகொண்டனர்.

பாலர் பாடசாலைகளுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிவைப்பு"

"ஆலையடிவேம்பில் பாலர் பாடசாலைகளுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிவைப்பு"

ஆலையடிவேம்பு பிரதேசத்திலுள்ள தெரிவு செய்யப்பட்ட பாலர் பாடசாலைகளுக்கு ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தினால் கற்றல் உபகரணங்கள் வழங்கும் வைபவங்கள் 18.12.2013, புதன்கிழமை காலை இடம்பெற்றன.

Photo Photo

Photo 

ர்.

இவ்வைபவத்திற்கு ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.ஜெகதீசன் அதிதியாகக் கலந்துகொண்டு பிரதேச செயலகத்தின் சார்பாக பாலர்களின் கற்றல் நடவடிக்கைகளுக்கு அவசியமான காகிதாதிகள் மற்றும் உபகரணங்களையும் பரிசுப்பொருட்களையும் வழங்கினார்.

ஆலையடிவேம்பு மகாசக்தி டயகோனியா பாலர் பாடசாலை, தீவுக்காலை கிராம எழுச்சி பாலர் பாடசாலை, நாவற்காடு கலைவாணி பாலர் பாடசாலை, சின்னப்பனங்காடு கிராம எழுச்சி பாலர் பாடசாலை, வாச்சிக்குடா மகாசக்தி பாலர் பாடசாலை, அக்கரைப்பற்று - 9 பாவேந்தர் பாலர் பாடசாலை, கோளாவில் - 2 மகாசக்தி பாலர் பாடசாலை, மகாசக்திகிராமம் மகாசக்தி பாலர் பாடசாலை ஆகியவற்றுக்கு இவை வழங்கிவைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திலிருந்து முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர் வை.உஜெயந்தன், பிரதேச செயலாளரது வெகுஜன தொடர்பு உத்தியோகத்தர் எஸ்.ஜே.பிரேம் ஆனந்த், பாலர் பாடசாலையின் மாணவர்கள், ஆசிரியைகள் மற்றும் மாணவர்களது பெற்றோர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இவ்வைபவங்களில் பாலர் பாடசாலை ஆசிரியைகளும் பெற்றோர்களும் தேவையறிந்து தமக்கு அத்தியாவசியமானவைகளாகவிருந்த கற்றல் உபகரணங்களை மனமுவந்து வழங்கியமைக்காக பிரதேச செயலாளருக்கும் ஊழியர்களுக்கும் தமது நன்றிகளைத் தெரிவித்தனர்

பிரதேசமட்ட தொழிற்சந்தை"

"ஆலையடிவேம்பில் நடைபெற்ற பிரதேசமட்ட தொழிற்சந்தை"

உற்பத்தித்திறன் மேம்பாட்டு அமைச்சு, மனிதவலு, வேலைவாய்ப்புத் திணைக்களத்தின் தொழில் உருவாக்கல், மேம்படுத்தல் மற்றும் தொழில் வழிகாட்டல் பிரிவு மற்றும் ஆலையடிவேம்பு பிரதேச செயலகம் என்பன இணைந்து 
பிரதேச செயலகக் கேட்போர் கூடத்தில் நடாத்திய மாபெரும் பிரதேசமட்ட தொழிற்சந்தை பிரதேச செயலாளர் வேதநாயகம் ஜெகதீசன் தலைமையிலும் மனிதவள அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எல்.தமீம் ஏற்பாட்டிலும் இன்று காலை 9.00 மணி முதல் பி.ப. 1.00 மணிவரை நடைபெற்றது.

Photo 
Photo
Photo

அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பி.எச்.பியசேன கௌரவ அதிதியாகக் கலந்துகொண்டு தேசிய கொடியேற்றி இத்தொழிற்சந்தையை ஆரம்பித்துவைத்து உரையாற்றியதுடன் பிரதேச செயலாளரும் இவ்வாரம்ப வைபவத்தில் சிறப்புரையாற்றினார்.

இத்தொழிற்சந்தையில் ஹாடி உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவகம், இலங்கை தொழிற்பயிற்சி அதிகாரசபை, தேசிய பயிலுனர் மற்றும் கைத்தொழிற் பயிற்சி அதிகாரசபை, காப்புறுதி நிறுவனங்கள், தயா ஆடை உற்பத்தி மற்றும் ஏற்றுமதி நிறுவனம், பிரதேசமட்ட தனியார் உயர்கல்வி நிறுவனங்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனங்கள் மற்றும் முகாமைத்துவ சேவை நிறுவனங்கள் உட்பட பல்வேறுபட்ட தொழில் வழங்குனர்கள் பங்கேற்றனர்.

ஆலையடிவேம்பு பிரதேசத்தில் பாடசாலைக் கல்வியைப் பூர்த்திசெய்த இளைஞர், யுவதிகளில் தொழிற்பயிற்சிகளைத் தொடர விரும்பியோர், காப்புறுதித்துறைகளில் வேலைவாய்ப்புக்களைப் பெற விரும்பியோர், வெளிநாட்டு வேலைவாய்ப்புக்களை எதிர்பார்ப்போர் உட்பட பலதரப்பட்ட மக்களும் இத்தொழிற்சந்தையில் பங்குபற்றி பயன்பெற்றனர்.

"ஆலையடிவேம்பில் நடைபெற்ற பாலர் பாடசாலை மழலைகளின் வருடாந்த கலைவிழா"


அக்கரைப்பற்று மகளிர் அபிவிருத்தி நிலையத்தின் ஏற்பாட்டில் இவ்வருடத்திற்கான ஆலையடிவேம்பு பிரதேச பாலர் பாடசாலை மழலைகளின் வருடாந்த கலைவிழா 23.12.2013, திங்கட்கிழமை ஆலையடிவேம்பு கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.

Photo 
து.





























இவ்விழாவிற்கு ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வேதநாயகம் ஜெகதீசன் பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பித்ததுடன் சிறார்களுக்கு சான்றிதழ்களையும் பரிசுகளையும் வழங்கிவைத்தார். மேலும் அம்பாறை மாவட்ட பாலர் பாடசாலை கல்விப்பணியகத்தின் செயற்பாட்டுப் பணிப்பாளர் ஏ.எல்.எம்.இப்றாஹிம் சிறப்பு அதிதியாகவும் அப்பணியகத்தின் முகாமைத்துவ உதவியாளர் பி.மோகனதாஸ் விசேட அதிதியாகவும் இவ்விழாவில் பங்குபற்றினர்.

இதில் அக்கரைப்பற்று – 8 விவேகானந்தா பாலர் பாடசாலை, அக்கரைப்பற்று – 7 கனகதுர்க்கா பாலர் பாடசாலை, கோளாவில் – 3 அம்பாள் பாலர் பாடசாலை, கோளாவில் – 1 விநாயகர் பாலர் பாடசாலை, பெரியபனங்காடு மறுமலர்ச்சி பாலர் பாடசாலை, ஆலையடிவேம்பு கனகாம்பிகை பாலர் பாடசாலை ஆகியவற்றிலிருந்து மாணவர்கள் கலந்துகொண்டு பேச்சு, நடனம், நாடகம் உட்பட பல்வேறுபட்ட கலைநிகழ்வுகளை நடாத்தினர். இறுதியாக அவர்களுக்கான பரிசளிப்பு வைபவம் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது

Monday, 18 November 2013

"ஆலையடிவேம்பில் ஜனாதிபதியின் பிறந்தநாள் விசேட பூஜை நிகழ்வு"



இலங்கையின் அதிமேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் 68 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, அவருக்கு நல்லாசிகள் வேண்டி ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட விசேட பூஜை வழிபாட்டு நிகழ்வு, பிரதேச செயலாளர் வேதநாயகம் ஜெகதீசன் தலைமையில் ஜனாதிபதியின் பிறந்தநாளான 18.11.2013, திங்கட்கிழமையன்று அக்கரைப்பற்று ஸ்ரீ வம்மியடிப்பிள்ளையார் ஆலயத்தில் நடைபெற்றது.

பிரதேச செயலாளரின் அழைப்பினை ஏற்று அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பி.எச்.பியசேன இவ்வழிபாடுகளில் கலந்துகொண்டதுடன் ஆலையடிவேம்பு பிரதேச செயலக ஊழியர்கள் மற்றும் ஆலயத்தலைவர் உள்ளிட்ட நிர்வாகக்குழு அங்கத்தவர்களும் பங்குபற்றிய இப்பூஜை நிகழ்வுகளை ஆலயக்குரு சிவஸ்ரீ.ப.கேதீஸ்வரன் அவர்கள் நடாத்திவைத்தார்.

இங்கு வனவிலங்குகளால் இருப்பிடங்கள் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் வெள்ளம், சுழல்காற்று போன்ற இயற்கை அனர்த்தங்களால் பாதிப்புற்றவர்களுக்கு பிரதேச செயலகத்தின் மூலமான சமுகசேவைகள் அமைச்சின் நிதியுதவிக் கொடுப்பனவுகளும் வழங்கப்பட்டன. இவற்றைப் பிரதேச செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினரும் வழங்கிவைத்தனர்.


 REPORTER 
Like ·  ·