Tuesday, 17 September 2024
வாக்கு மோசடி
வாக்கு மோசடியில் ஈடுபடுவோருக்கு 2 இலட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
தேர்தல் ஆணைக்குழு மேலும் குறிப்பிடுகையில்,
வாக்கு மோசடியில் ஈடுபடுவோருக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அந்த தொகை 2 இலட்சம் ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்தக் குற்றச்சாட்டில் குற்றவாளிகள் என நிரூபிக்கப்படும் நபர்களுக்கு ஓராண்டுக்கு குறையாத காலம் சிறைத்தண்டனை விதிக்கப்படும் எனவும் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
2023 ஆம் ஆண்டு 23 ஆம் இலக்க தேர்தல் விசேட ஏற்பாடுகள் சட்டத்தின் கீழ் உரிய சட்டங்களை கடுமையாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.haran
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment