கொரோனா வைரஸ் நிலைமைகளால், வங்கிக் கடன்களைப் பெற்றுக்கொண்டவர்கள், லீசிங் (LEASING) செலுத்தி வருபவர்களுக்கு நிவாரணங்கள் தேவை என்றால், அதுதொடர்பில் அந்தந்த நிறுவனங்கள், வங்கிகளுக்கு எழுத்து மூலமாக கோரிக்கை ஒன்றை விடுத்து நிவாரணங்களைப் பெற்றுக்கொள்ள முடியுமென மத்திய வங்கி அறிவித்துள்ளது.
வங்கிகளில் பெற்றுக்கொண்ட கடன்களை செலுத்துவோர், லீசிங் செலுத்தி வருவோருக்கு இம்மாதம் 21ஆம் திகதிக்கும் முன்பும், வங்கியற்ற நிதி நிறுவனங்களிடமிருந்து கடன்களைப் பெற்றுக்கொண்டோருக்கு இம்மாதம் 15 ஆம் திகதிக்கு முன்பும் நிவாரணங்கள் தேவை என்றால் எழுத்து மூலமாகக் கோரிக்கை விடுக்க வேண்டுமெனவும் மத்திய வங்கி அறிவித்துள்ளது.
கடன்களைப் பெற்றவர்களுடன் கலந்துரையாடி இணக்கப்பாடொன்றுக்கு வர வேண்டுமென வங்கிகளுக்கும், நிதி நிறுவனங்களுக்கும் மத்திய வங்கிய அறிவுறுத்தியுள்ளது. மேலும், இதில் ஏதாவது சிக்கல்கள் இருக்குமாக இருந்தால், 0112477966 எனும், மத்திய வங்கியின் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு அறிவிக்க முடியுமெனவும் மத்திய வங்கி அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment