Tuesday, 11 May 2021

பயணக் கட்டுப்பாட்டை விதிக்க

haran



மாகாணங்களுக்கு இடையிலான பேருந்து சேவைகளை நேற்று நள்ளிரவு முதல் இடைநிறுத்தியுள்ளதாக இலங்கை போக்குவரத்துச் சபை தெரிவித்துள்ளது.


மாகாணங்களுக்கு இடையில் பயணக் கட்டுப்பாட்டை விதிக்க அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டுள்ள தீர்மானத்திற்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக இலங்கை போக்குவரத்து சபையின் பிரதி பொது முகாமையாளர் ஏ.எச். பண்டுக்க ஸ்வர்ணஹங்ச குறிப்பிட்டார்.

அதன்படி அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரமே பேருந்துகளை இயக்குமாறு இலங்கை போக்குவரத்து சபை அனைத்து டிப்போ கண்காணிப்பாளர்களுக்கும் அறிவுறுத்தியுள்ளது.

No comments: