திருக்கோவில் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட இத்திக்குளம் பகுதியில் குளிக்க சென்ற குடும்பஸ்தர் ஒருவரை முதலை இழுத்து சென்றுள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது .
சம்பவ இடத்திற்கு வருகை தந்த திருக்கோவில் பொலிஸ் பொறுப்பதிகாரி டி.எம்.திலகரத்ன மற்றும் பொலிஸார் தேடல் நடவடிக்கைக்கு ஏற்பாடு செயதுள்ளனர்
குடிநிலம் பகுதியில் வசிக்கும் 62 வயதுடைய 4 பிள்ளைகளின் தந்தையான காத்தமுத்து மேகநாதன் என்பவரே இவ்வாறு முதலை இழுத்து சென்று காணாமல் போயுள்ளார்.
இந் நிலையில் காணாமல் போனவரை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன் கடற்படை உதவியையும் நாடியுள்ளதாகவும் திருக்கோவில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மேலும் தெரிவித்தார்
No comments:
Post a Comment