Sunday, 19 December 2021

திருவெம்பாவை இன்று

பனங்காட்டு ஶ்ரீ பாசுபதேசுவர தேவஸ்தான இன்றைய நிகழ்வுகள் ...... 


haran

Wednesday, 15 December 2021

மார்கழியில் திருவெம்பாவை ஆரம்பம் (11)

ஆர் நடராஜன்  0777 514279

மாதங்களிலெல்லாம் சிறந்த மார்கழியை இறை வழிபாட்டிற்கே உரிய மாதமென்றே சொல்லலாம். வெள்ளத்தில் ஏற்படும் சுழியானது துவக்கத்தில் மெதுவானதாகவும், அதன் தன்மையை உணர்வதற்குள், மிக வேகமானதாகவும், ஆழ்த்திவிடுவதாகவும் உள்ள படுசுழியான தன் தன்மையைக் காட்டிவிடுகிறது. அதுபோல மயக்கத்தில், செல்லும் திசை தெரியாது ஆழச் செல்லும் உயிர்களை உணர்வூட்டி, "கண்ணைத் துயின்று அவமே காலத்தைப் போக்காதே" என்ற பொன்னான வாசகத்தால் கைதூக்கி விடுவன திருவெம்பாவையும் திருப்பள்ளியெழுச்சியும்.