திருக்கோவில் கல்வி வலய அக்கரைப்பற்று திருவள்ளுவர் பாடசாலையில் இன்று காலை வழமை போன்று கல்வி நடவடிக்கைகள் தொடர்வதற்காக பாடசாலைக்கு வந்த மாணவர்கள் நுழைவாயிலின் தன்மைக்கட்டு முகம் சுழித்துப்போனதுடன் இவ்வாறான நயவஞ்சக செயலினை செய்தவரைக்கண்டு வியந்து நின்றனர்
இன்று திருவள்ளுவர் பாடசாலையில் கடந்த புலமைப்பரிசில் சித்தியடைந்த 14 மாணவ மாணவியரினை பாராட்டி கெளரவிக்கும் நிகழ்வு நடை பெறவிருந்ததினை முன்னிட்டு நேற்று பாடசாலை பெற்றோர்களால் சிரமதானம் இடம் பெற்றது
இதன் பின்னர் திரண்ட குப்பைகளை அப்புறப்படுத்தி பாடசாலையின் குப்பை சேரும் பகுதியில் வைத்துள்ளனர் இது அவ் அரச உத்தியோகத்தரின் வீட்டிற்கு முன்பாக என்பதினால் அக்குப்பைகளை அப்படியே அள்ளிவந்து பாடசாலையின் நுழைவாயிலில் போ ட்டுவிட்டுச சென்றுள்ளார்
குறிப்பாக இதனை செய்த அவ் உத்தியோகத்தர் சமூகத்திற்கு முன் உதாரணமாக செயற்பட்டு பல சிரமதான பணிகளை முன்னின்று தலைமைதாங்கிசெய்ய வேண்டிய இவ்வாறான உத்தியோகத்தர்கள் இவ்வாறு செய்வது சமூகத்தின் பார்வையில் அவர்கள் மீது வெறுப்புணர்வினை ஏற்படுத்தி இருக்கின்றது
எனவே சம்பந்தப்படட அதிகாரிக்கு எதிராக சரியான நடவடிக்கையினை எடுக்க வேண்டுமென பெற்றோர் சங்கமும் கோரிக்கை விடுக்கின்றனர்
"
No comments:
Post a Comment