Wednesday, October 30, 2013
ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் பட்டதாரி பயிலுனர்களுக்கான நிரந்தர நியமனம் வழங்கிவைப்பு.
பட்டதாரி பயிலுனர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கும் நிகழ்வானது ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வே.ஜெகதீசன் தலைமையில் பிரதேச செயலக கலாசார மண்டபத்தில் 2013.10.28 ஆம் திகதி இடம்பெற்றது.
நிகழ்விற்கு பிரதம அதிதிகளாக அம்பாறை மாவட்ட செயலாளர் நீல் டி அல்விஸ் மற்றும் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பி.எச்.பியசேன ஆகியோர் கலந்துகொண்டதுடன் , 39 பட்டதாரி பயிலுனர்களுக்கான நிரந்தர நியமனங்களையும் வழங்கிவைத்தார்கள்.
இந் நிகழ்வின்போது பாராளுமன்ற உறுப்பினரின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் இரண்டு விளையாட்டு கழகங்களுக்கான விளையாட்டு உபகரணங்களும் வழங்கிவைக்கப்பட்டது.