இல்லாதவர்களுக்கு இருப்பவர்கள் உதவி செய்யவேண்டும் என்பதை இஸ்லாமிய மார்க்கம் வலியுறுத்துகிறது. அத்தகைய உயரிய நோக்கத்தோடு வாழ்கின்ற இஸ்லாமிய பெருமக்கள் `மிலாது நபி' எனும் அண்ணல் நபிகள் நாயகம் பிறந்த நாளை உலகம் எங்கும் மகிழ்வுடன் கொண்டாடுகின்றனர்.
இந்த இனியவேளையில், இஸ்லாமிய பெருமக்கள் அனைவருக்கும் கிழக்கு மாகாண ஆளுநரும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவருமான செந்தில் தொண்டமான் தனது வாழ்த்துச் செய்தியை தெரிவித்துள்ளார்.
உலகம் செழிக்கவும், மானுடம் தழைக்கவும், சமுதாயத்தில் சாந்தியும், சமாதானமும், சகோதரத்துவமும் பெருக வேண்டும் என்பது அண்ணல் நபிகளின் அருட்போதனை ஆகும். நபிகள் நாயகத்தின் பிறந்த நாளன்று அவர்களின் போதனைப்படி, அன்பு பெருகவும், அமைதி நிலைக்கவும், சமரசம் உலவவும், சகோதரத்துவம் தழைக்கவும் அயராது உழைத்திட உறுதி ஏற்போம் எனக்கூறி, இஸ்லாமிய பெருமக்கள் அனைவருக்கும் எனது இனிய `மிலாது நபி' நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்தில் பெரு மகிழ்வுருகின்றேன் என்றும் அவர் தனது வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவித்துள்ளார்.

haran
No comments:
Post a Comment