Friday, 27 August 2021

வீடுகளிலேயே துரித அன்டிஜன் பரிசோதனை


வீடுகளிலேயே துரித அன்டிஜன் பரிசோதனைகளை (Rapid Antigen Test) மேற்கொள்ளும் திட்டத்தை அறிமுகப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தொழிற்சங்க பிரதிநிதிகளுடனான கலந்துரையாடலின் போது, சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல நேற்று இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.




COVID தொற்றினால் உயிரிழப்போரில் 86 வீதமானோர் பல்வேறு நோய்களுக்குள்ளானவர்கள் எனவும், 12 வீதமானோர் ஒரு தடுப்பூசியை மாத்திரம் ஏற்றிக்கொண்டவர்கள் எனவும் சுகாதார அமைச்சர் கூறியுள்ளார்.

இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றுக்கொண்டவர்களில் 2.5 வீதமானவர்களே கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளதாக தெரிவித்த சுகாதார அமைச்சர், அவர்களும் ஏனைய நோய்களால் பீடிக்கப்பட்டவர்கள் என கூறியுள்ளார்.

இதேவேளை, எதிர்வரும் நவம்பர் மாத நிறைவிற்குள் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் முழுமையாக தடுப்பூசியை ஏற்ற முடியும் என சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்

இலங்கைக்கான கியூப தூதுவரை நேற்று சந்தித்த போதே சுகாதார அமைச்சர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

நாட்டிலுள்ள அனைத்து பிரஜைகளுக்கும் இரண்டு கொரோனா தடுப்பூசிகளும் ஏற்றப்பட்டதன் பின்னர், மூன்றாவது தடுப்பூசி தொடர்பில் கவனம் செலுத்தப்படும் என சுகாதார அமைச்சர் கூறியுள்ளார்

haran

No comments: