haran
(எழில் ரமணன் )
காரைதீவு ஜல்லிக்கட்டு இளைஞர் அமைப்பினரின் தைப்பொங்கல் கொண்டாட்ட விழா அமைப்பின் தலைவர் விசிகரன் தலைமையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை காரைதீவு கடற்கரையில் நடைபெற்றது .
யானைக்கு கண் வைத்தல், தேங்காய் திருவுதல்,கயிறு இழுத்தல் போன்ற தமிழர்களின் கலாச்சார விளையாட்டு நிகழ்வுகள் இடம்பெற்றது.
2018ம் ஆண்டு காரைதீவிலிருந்து பல்கலைக்கழகத்திற்கு தெரிவான மாணவர்களுக்கான கெளரவிப்பு நிகழ்வும் காரைதீவு இராம கிருஷ்ண மிஷனில் கல்வி கற்கின்ற மாணவர்களுக்கான சீருடை துணி வழங்கி வைக்கின்ற நிகழ்வும் இடம்பெற்றது.
நிகழ்விற்கு பாராளமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் , காரைதீவு பிரதேச செயலாளர் ஜெகதீசன் ,காரைதீவு பிரதேச சபை தவிசாளர் கி.ஜெயசிறில் மற்றும் காரைதீவு பிரதேச சபை உறுப்பினர்களான எஸ். நேசராஜா,காண்டீபன் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.
இறுதியாக விளையாட்டு நிகழ்சிகளில் வெற்றியீட்டியவர்களுக்கு அதிதிகளினால் பரிசில்களும் வழங்கப்பட்டது.

No comments:
Post a Comment