Thursday, 8 December 2016

ஜெயலலிதாவுக்கு அஞ்சலி

இலட்சக்கணக்கான மக்களின் கதறலும் புரட்சி தலைவியின் சகாப்தம் நிறைவுக்கு வருகின்றது.
-வங்கக் கடலோரம் தமிழக திரை உலகின், அரசியல் அரங்கத்தின் மாபெரும் சகாப்தம் மீளாதுயில் கொள்கிறது
-ஜெயாவின் உடல் வைக்கப்பட்ட சந்தனப்பேழை, சவக்குழிக்குள் இறக்கப்படுகின்றது.

-ஜெயாவின் உடல் வைக்கப்பட்ட சந்தனப்பேழை மூடப்படுகின்றது.
-ஜெ.வின் பூத உடலில் இருந்து தேசியக் கொடி உரிய மரியாதையுடன் அகற்றப்பட்டது
-ஜெ. அண்ணன் மகன் தீபக்குடன் இறுதி சடங்குகளை இணைந்து செய்தார் சசிகலா
-ஜெ. உடலுக்கு இறுதி சடங்குகளை செய்தார் ஜெ. அண்ணன் மகன் தீபக், குலாம்நபி ஆசாத், சசிகலா கணவர் இறுதி மரியாதை செலுத்தினர்
-காங். துணைத் தலைவர் ராகுல் இறுதி மரியாதை செலுத்தினார்
-தமிழக அரசு தலைமை செயலர் ராமமோகன்ராவ், முன்னாள் ஆளுநர் ரோசய்யா இறுதி மரியாதை
-ஜெயலலிதா உடலுக்கு முன்னாள் ஆளுநர் ரோசய்யா மலர்வளையம் வைத்து இறுதி அஞ்சலி
-மத்திய அமைச்சர்கள் வெங்கையா நாயுடு, பொன். ராதாகிருஷ்ணன் முதல்வர் பன்னீர்செல்வம், லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை,அமைச்சர் எடப்பாடி பன்னீர்செல்வம் ஜெயாவுக்கு இறுதி மரியாதை செலுத்தினர்கள்.
- மக்களின் அழுகை சத்தம் காற்றில் கலந்து வருகின்றது.
- அரசியல்வாதிகள், மூத்த தலைவர்கள் இறுதி அஞ்சலி செலுத்துகின்றனர்.
-சுற்றியுள்ள மக்கள் கதறியழுகின்றனர்.
-சந்தனப்பேழையில் வைக்கப்பட்ட ஜெயாவின் உடலுக்கு ஆளுநர் இறுதி மரியாதை செலுத்துகின்றார்.
- முப்படையினர் மரியாதை வேட்டுக்களை தீர்த்து, ​ஜெயாவின் உடலுக்கு மரியாதை செலுத்துகின்றனர்.
-சந்தனப்பேழையில் “புரட்சித் தலைவி ஜெயலலிதா“ என பெயர் பொறிக்கப்பட்டிருக்கிறது
-ஜெயாவின் பூதவுடலுக்கு முப்படை தளபதிகள் மரியாதை செலுத்துகின்றனர்.
-இராணுவ கவச வாகனத்தில் இருந்து ஜெயாவின் பூதவுடல் இறக்கப்படுகிறது
-ஜெயாவின் பூதவுடல், இறுதி சடங்குக்காக சந்தனபேழைக்கு மாற்றப்படுகின்றது.
-ஜெயலலிதாவின் இறுதி ஊர்வலம், எம்.ஜி.ஆர் நினைவிடத்தை அடைந்தது.
-ஜெயலலிதாவின் இறுதி ஊர்வலம், மெரினா கடற்கரை சாலையை அடைகின்றது
- எம்.ஜி.ஆர் நினைவிட வளாகத்திலேயே மீளா துயில் கொள்ளச் செல்கிறார் ஜெயா.
-ஜெ. உடல் செல்லும் இராணுவ வாகனத்தில் புதிய முதல்வர் பன்னீர் செல்வத்துடன் உபி முதல்வர் அகிலேஷ் யாதவும் செல்கிறார்
-தமிழகத்தின் 'இரும்புப் பெண்மணி' ஜெ.வின் உடல் இன்னும் சிறிது நேரத்தில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.
-அண்ணாசாலை வழியாக ஜெயலலிதாவின் இறுதி ஊர்வலம் செல்கிறது
-அண்ணா சாலை, அண்ணா சிலை, வாலாஜா சாலை வழியாக எம்.ஜி.ஆர் நினைவிடம் செல்கிறது ஜெயாவின் இறுதி ஊர்வலம்
-வீடுகளின் மாடிகள் மற்றும் மரங்களில் ஏறி ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டுள்ளனர்.
-ஜெயலலிதாவின் உடலுக்கு மலர்தூவி மக்கள் இறுதி அஞ்சலி
-வீதிகளின் இருபக்கமும் இலட்சக்கணக்கான தொண்டர்கள் திரண்டு அஞ்சலி செலுத்துகின்றனர்.
-இலட்சக்கணக்கான தொண்டர்களுடன் ஜெயலலிதாவின் இறுதி ஊர்வலம் ஆரம்பமாகியது
-ஜெயலலிதாவின் இறுதி ஊர்வலத்துக்கான ஏற்பாடுகள் தொடங்கின
-கண்ணாடிப் பேழையில் வைத்து ஜெயலலிதாவின் உடல் மூடப்பட்டது
-ஜெயலலிதா உடல் அடங்கிய சவப்பெட்டியை ராணுவ அதிகாரிகள் மூடினர்
-ஜெயலலிதா மிகச்சிறந்த அரசியல் தலைவர் - ராகுல்காந்தி
-மிகச்சிறந்த பெண் அரசியல் தலைவரை நாடு இழந்து தவிக்கிறது: ராகுல்காந்தி
-இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்தினார்
-ராகுல் காந்தி ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்தினார்
-குலாம் நபி ஆசாத், திருநாவுக்கசரும் அஞ்சலி செலுத்தினர்
-இன்னும் சிறிது நேரத்தில் ஜெயலலிதா இறுதி ஊர்வலம் தொடங்கவுள்ளது
-ராஜாஜி அரங்கிலிருந்து அலங்கரிக்கப்பட்ட பீரங்கி வண்டியில் இறுதி ஊர்வலம் தொடங்குகிறது
-அண்ணா சாலை, வாலாஜா சாலை, காமராஜர் சாலை வழியாக எம்.ஜி.ஆர். சமாதியை ஊர்வலம் அடைகிறது -எம்.ஜி.ஆர் சமாதி வளாகத்தில் உடல் அடக்கம் நடைபெறும்
-இறுதி ஊர்வலத்தையொட்டி இலட்சக்கணக்கில் தொண்டர்கள் எம்.ஜி.ஆர். சமாதியில் குவிந்துள்ளனர்
-இறுதி ஊர்வலத்திற்குப் பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு -ஹெலிகொப்டர்கள் மூலமாகவும் இறுதி ஊர்வலம் கண்காணிக்கப்படவுள்ளது
-இன்னும் சிறிது நேரத்தில் மெரீனா எம்ஜிஆர் நினைவிடத்தில் ஜெ. உடல் நல்லடக்கம்
-ஜெ. உடலுக்கு கேரளா ஆளுநர் சதாசிவம், முதல்வர் பினராயி விஜயன் இறுதி அஞ்சலி
-ஜெ. உடலுக்கு மகாராஷ்டிரா முதல்வர் பட்னவிஸ் அஞ்சலி
-ஜெ. உடலுக்கு கேரள முன்னாள் முதல்வர் உம்மன்சாண்டியும் அஞ்சலி
-கேரள ஆளுநர் சதாசிவம் ஜெயலலிதாவுக்கு அஞ்சலி
-கேரள முதல்வர் பினராயி விஜயன், முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டியும் அஞ்சலி செலுத்தினர்
-ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்த காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் சென்னை வந்தடைந்தார்
-தமிழர் தேசிய இயக்க தலைவர் பழ. நெடுமாறன் ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்தினார்
-மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்தினார்
-மனைவியுடன் வந்து அஞ்சலி செலுத்தினார் வைகோ
-மதிமுக பொதுச்செயலர் வைகோ துணைவியாருடன் அஞ்சலி செலுத்தினார்
-தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் அஞ்சலி செலுத்தினார்
-ராஜ்ய சபா எம்பி டி. ராஜா, சி. மகேந்திரன் ஜெயலலிதாவிற்கு நேரில் அஞ்சலி
-இந்தியாவுக்கும், தமிழகத்துக்கும் ஈடு செய்ய முடியாத இழப்பு: டி. ராஜா
-குணம் அடைந்துவிட்டார் என்ற நிலையில் மரணச் செய்தி அதிர்ச்சியை அளிக்கிறது: டி. ராஜா
-சிபிஐ சார்பில் ஜெயலலிதாவுக்கு எங்களது வணக்கம்: டி. ராஜா
-நடிகர் சிம்பு அஞ்சலி செலுத்தினார்
-கூட்டநெரிசல் தள்ளுமுள்ளுவில் சிக்கினார் நடிகை சரோஜா தேவி
நடிகை சரோஜாதேவி முதல்வர் ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்தினார்

சென்னை ராஜாஜி அரங்கில் வைக்கப்பட்டுள்ள  செல்வி. ஜெயலலிதாவின் பூதவுடலுக்கு இலட்சக்கணக்கான மக்ள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அது தொடர்பான நேரடி காட்சிகளே இவை.
- See more at: http://www.tamilmirror.lk/187541#sthash.in1I1bgN.dpuf

No comments: