கடந்த ஒக்டோபர் 1 இல் உலகளாவிய ரீதியில் கொண்டாடப்பட்ட சர்வதேச சிறுவர் தினத்தைச் சிறப்பிக்கும் வகையிலான விசேட வைபவமொன்று இன்று, 13-10-2014 திங்கட்கிழமை காலை ஆலையடிவேம்பு பிரதேச செயலகக் கலாசார மண்டபத்தில் பிரதேச செயலாளர் வி.ஜெகதீசன் தலைமையில் சிறப்பாக இடம்பெற்றது.
சிறுவர் அபிவிருத்தி மற்றும் மகளிர் விவகார அமைச்சின் அனுசரணையோடு ஆலையடிவேம்பு பிரதேச செயலக முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர் வை.உஜெயந்தனால் ஏற்பாடு செய்யப்பட்ட இவ்வைபவத்திற்கு பிரதேச செயலாளர் தலைமையில் உதவித் திட்டமிடல் பணிப்பாளர் திருமதி. திலகராணி கிருபைராஜா, திவிநெகும திணைக்கள பிரதேச உத்தியோகத்தர் கே.நேசராஜா, மேலதிக மாவட்டப் பதிவாளர் எம்.பிரதீப், சிறுவர் மற்றும் மகளிர் அபிவிருத்திப் பிரிவு உத்தியோகத்தர்கள் ஆகியோர் அதிதிகளாகக் கலந்து சிறப்பித்தனர்.
இவ்வைபவத்தைச் சிறப்பிக்கும் வகையில் ஆலையடிவேம்பு பிரதேச அனைத்துப் பாலர் பாடசாலை சிறார்கள், ஆசிரியைகள் மற்றும் பெற்றோர்கள் இணைந்து ஒழுங்குசெய்த கலை, கலாசார நிகழ்வுகள் அதிதிகளதும் பார்வையாளர்களதும் பலத்த கரகோஷங்களையும் பாராட்டுக்களையும் பெற்றன.
இதன்போது இவ்வைபவத்திற்குச் சமுகமளித்த அனைத்து சிறார்களுக்கும் பிரதேச செயலாளர் உள்ளிட்ட அதிதிகளால் இனிப்புப் பொதிகளும், கலை, கலாசார நிகழ்வுகளில் பங்குபற்றியோருக்குப் பரிசில்களும் வழங்கிவைக்கப்பட்டன. தொடர்ந்து அதிதிகளின் சிறுவர் தினச் சிறப்புரைகள் இடம்பெற்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment