(உ.உதயகாந்த்)
தேசத்திற்கு மகுடம் ஏழாவது பட்டாபிஷேகத்தினை முன்னிட்டு கிழக்கு மாகாணத்தில் நடைபெற்று வரும் அபிவிருத்தி செயற்பாடுகளில் பொலிசாரின் பங்களிப்புடன் பிரச்சனைகள் இனம் கானப்பட்ட கிராம சேவை உத்தியோகத்தர் பகுதிகளில் அபிவிருத்திகளை மேற்கொள்ள வேண்டும் மற்றும் பாதுகாப்பு படையினரும் மக்களும் நல்லுறவை பேன வேண்டும் எனும் மகிந்த சிந்தனைக்கு அமைவாக கிழக்கு மாகாணத்தில் 43 பொலிஸ் நடமாடும் சேவை நிலையங்கள் ''சுரகிமு லங்கா சமூக பொலிஸ் சேவை '' எனும் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட கிராமங்களில் 14 நாட்களுக்கு தற்காலிகமாக பொலிஸ் நிலையம் அமைத்து சேவை செய்யும் நோக்கில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.
அந்த வகையில் கிழக்கு மாகாணத்தில் முதல் முதலில் ஆரம்ம்பிக்கப்பட்டு முதலில் சேவையினை நிறைவு செய்த இறுதி நிகழ்வானது ஒலுவில் பொது விளையாட்டு மைதானத்தில் அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜனாப் யு.எல்.ஹாஜா முகைதின் தலைமையில் 20.03.2013திகதி மாலை 4.00 மணியளவில் மிக விமர்சையாக ஆரம்பிக்கப்பட்டது.
இந் நிகழ்வில் பிரதம அதிதியாக கௌரவ கிழக்கு மாகாண சிரேஸ்ட உதவி பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜெயசுந்தர அவர்கள் கலந்து கொண்டதுடன் கௌரவ அதிதிகளாக அம்பாறை மாவட்டத்திற்கு பொறுப்பான பொலிஸ்மா அதிபர் கருணாரத்ன அவர்களும் , கௌரவ அமைச்சர் அத்தாவுல்ல அவர்களின் இணைப்பு செயலாளர் அவர்களும் , ஆலையடிவேம்பு, அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று பிரதேச செயலாளர்களும் , பிரதேச சபைகளின் தவிசாளர்களும் , இராணுவ உயரதிகாரிகளும் , கடற்படை அதிகாரிகளும் கலந்து சிறப்பித்தார்கள்.
மேலும் இந் நிகழ்வின் போது கல்விசார் நிகழ்வுகளில் கலந்து கொண்டு முதலிடம் பெற்றவர்களின் திறமைகள் அரங்கேற்றப்பட்டதுடன் பரிசில்களும் சான்றிதழ்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
பொலிஸ் நடமாடும் சேவையுடாக ஒலுவில் பிரதேசத்தினை அண்டிய பதின்மூன்று கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் மக்களின் பல்வேறுபட்ட பிரச்சனைகள் தீர்த்து வைக்கப்பட்டுள்ளதாகவும், இச் செயற்பாடானது வசதி குறைந்த எமது இக் கிராம உத்தியோகத்தர் பிரிவுகளிர்கான அபிவிருத்தியின் முதற்படி என்றும் இவ்வாறான தேசிய செயற்பாட்டு திட்டத்தினை எமது பிரதேச செயலாளர் பிரிவில் நடைமுறைப்படித்தியமைக்கு அட்டாளைச்சேனை உதவி பிரதேச செயலாளர் என்ற வகையில் கிழக்கு மாகாண சிரேஸ்ட உதவி பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜெயசுந்தர அவர்களுக்கும் இத் திட்டத்தினை திறம்பட நடாத்தி முடித்த அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜனாப் யு.எல்.ஹாஜா முகைதின் அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் என உதவி பிரதேச செயலாளர் திரு எஸ்.ஜெயரூபன் தனது உரையில் கூறினார்.
பொலிஸ் நடமாடும் சேவையின் இறுதி நாள் பண்பாட்டுக் கலை விழாவினை மேலும் அழகுபடுத்துமுகமாக நகைச்சுவை நாடகங்கள் மற்றும் பட்டி மன்றமும் , அந்தி மாலை பொழுதினில் அனைவரையும் மகிழ்ச்சியூட்டுமுகமாக இன்னிசைராக இசை நிகழ்வும் நடைபெற்றது குறிப்பிடத்தக்க விடையமாகும்.
No comments:
Post a Comment