Sunday, 4 August 2024

ஜனாதிபதி தேர்தல்-ஒக்டோபர் ?



எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 5ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் என சுற்றுலா, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

காலியில் ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

இலங்கையில் தற்போது சாத்தியமில்லாத பல விடயங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி தேர்தலின் போது மக்கள் புத்திசாலித்தனமாக சிந்தித்து செயற்படுவார்கள் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.



haran

No comments: