கொரோனா பெருந்தொற்று பாதித்த 2020-21 ஆம் ஆண்டில், மிக அதிக அளவில் பயன்படுத்தப்படும் கருத்தடை சாதனமான ஆணுறைகள், நாட்டில் மிகக் குறைந்த அளவே விற்பனையானதாக
இந்திய மத்திய நல்வாழ்வுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.இந்தியாவில் கருத்தடைச் சாதனமான ஆணுறைகள் விற்பனையில் கடந்த ஐந்து ஆண்டுகளில் இதுவே மிகவும் குறைவு என்பது குறிப்பிடத் தக்கது.
கரோனா காலத்தில் விதிக்கப்பட்டிருந்த எண்ணற்ற கட்டுப்பாடுகள்தான் இந்த விற்பனை பாதிப்புக்குக் காரணம் என்றும் கூறப்படுகிறது
தகவலறியும் உரிமைச் சட்ட செயற்பாட்டாளரான சந்திரசேகர கௌர் என்பவரின் கேள்விக்கு மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சகம் பதிலளித்துள்ளது.
கரோனா முதல் அலையின் தீவிர பரவல் காரணமாக, இந்தியாவில் மிகக் கடுமையான கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருந்த நிலையில், 2020-21 நிதியாண்டில் 24.431 கோடி ஆணுறைகள் மட்டுமே விற்கப்பட்டுள்ளன என்று அரசுத் தகவலை மேற்கோள் காட்டித் தெரிவித்துள்ளார் கௌர்.
இந்த அளவுக்குக் குறைவான எண்ணிக்கையில் ஆணுறைகள் விற்கப்பட்டிருப்பதன் காரணமாக, இந்தக் காலகட்டத்தில் 10 மடங்கிற்கும் அதிகமான அளவில் தேவையற்ற கருத்தரிப்புகள் நேர்ந்திருக்கும் என்று குழந்தை பிறப்புத் தடுப்பு ஆய்வாளர் டாக்டர் ராஜீவ ரஞ்சன் குறிப்பிட்டுள்ளார்.
ஆணுறைகளின் விற்பனைக் குறைவு மற்றும் தேவையற்ற கருத்தரிப்புகளின் அதிகரிப்பு ஆகியவற்றின் தொடர் விளைவுகள் பற்றி உறுதியான தகவல்கள் எதுவும் தெரியவில்லை
No comments:
Post a Comment