இந்துக்களின் மகா சிவராத்திரி விரதம் இன்று
பனங்காடு தினகரன் நிருபர் ஆர்.நடராஜன் 077538141
சிவசக்தி அம்சம் கொண்ட நாளாகப் போற்றப்படும் மஹா சிவராத்திரி என்ற சுடர் மொழியினைக் கொண்ட பெருமை மிக்க சிவனுக்கு உரிய இரவு எனப் பொருள் படும் மகா சிவராத்திரி விரதப் பூஜைகள் இன்று உலகம் பூராவும் உள்ள இந்து மக்களால் புனிதமாக அனுஸ்டிக்கப்படுகின்றது
சிவராத்திரியானது மகாசிவராத்திரி ,ஜோகசிவராத்திரி ,நித்தியசிவராத்திரி , மாத சிவராத்திரி , பட்சசிவராத்திரி , என ஜய்து வகைப்படும்
இதில் ஆண்டு தோறும் மாசி மாத தேய்பிறை (14) திகதியில் அதாவது கிருஷ்ண பட்சத்து சதுர்த்தியில் வரும் விரதமாகும் இது பற்றி 27 ஆகமங்களிலும் இதன் சிறப்பினை நாம் பார்க்கக்கூடியதாகவுள்ளது
பொதுவாக சிவராத்திரி தினத்தில் பலனாக எமது முன் ஜென்ம பாவங்கள் விமோசனம் கிடைப்பதுடன் இன்றைய வாழ்விற்கும் அடுத்த ஜென்ம வாழ்விற்கும் நற்பலன் கிடைப்பதுடன் இப் பூவுலகில் நல்வாழ்வு கிடைப்பதற்கு இந்த சிவராத்திரி விரதம் வழிவகுக்கட்டும்
haran
No comments:
Post a Comment