Pages

Saturday 30 June 2018

புலிகளின் புதையல்?



கிளிநொச்சியின் இரு வேறு பகுதிகளில் இன்றும் நேற்றும் விடுதலை புலிகளின் புதையல் தேடும் பணிகள் இடம்பெற்றன. கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றின் அனுமதியுடன் பொலிசாரின் கண்காணிப்பில் குறித்த அகழ்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.



கிளிநொச்சி கனகாம்பிகைகுளம் பகுதியில் கடந்த 26.06.2018 அன்று அகழ்வு பணி முன்னெடுக்கப்பட்டு கைவிடப்பட்டது. அப்பகுதியில் உறுதியாக தங்கம் காணப்படுகின்றது என தெரிவித்து மீண்டும் நேற்று அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டன. இரவு 9 மணிவரை அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்ட போதிலும் எவ்வித சான்றுகளும் கிடைக்கவில்லை.

இந்நிலையில் குறித்த அகழ்வு பணியின்போது ஆமை ஒன்று உயிருடன் மீட்கப்பட்டு அருகில் காணப்பட்ட நீர் ஓடையில் விடப்பட்டது. அகழ்வு மேற்கொள்ளப்பட்டபோது தோண்டப்பட்ட மண்ணை அதிகாலை 4 மணிவரை மூடியமை குறிப்பிடதக்கதாகும்.இதேவேளை இன்று கிளிநொச்சி பரவிப்பாஞ்சான் பகுதியில் விடுதலை புலிகளின் முகாம் ஒன்று அமைந்திருந்த பகுதியில் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டன. குறித்த அகழ்வு பணியின்போது எவ்வித பொருட்களும் மீட்கப்படாத நிலையில் கைவிடப்பட்டமையும் குறிப்பிடதக்கதாகும்.

No comments:

Post a Comment

Walden